மயிலாடுதுறையில் அதிகரிக்கும் மணல் கொள்ளை - புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு...!
''மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 94426 26792 என்ற எண்ணிற்கு அலைபேசி வாயிலாகவோ அல்லது WHATSAPP மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்''
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டு நடைபெறுவதாகவும், இது தொடர்பாக காவல்துறையினர், கனிமவள அதிகாரிகள், வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மணல் திருட்டு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்டத்தில் மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 154 நான்கு சக்கர வாகனங்களும், 77 ஜேசிபி மற்றும் மாட்டு வண்டிகளும் அடங்கும்.
அது மட்டும் அல்லாமல், இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் இன்றி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு நபர் மீது இதுபோன்ற தொடர் மணல் திருட்டு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என்றும்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
பொதுமக்கள் உங்கள் ஊர்களில் மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 94426 26792 என்ற எண்ணிற்கு அலைபேசி வாயிலாகவோ அல்லது WHATSAPP மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு தகவல்கள் தெரிவிப்பர்களின் விபரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் தற்போது மணல் திருட்டு வாகனங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆற்றுப்படுகைகளில் குவாரிகளில் மணல் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் கட்டிட தொழில் களுக்கு மணல் தட்டுப்பாடு பெருமளவு நிலவி வருகிறது. இதனை பயன்படுத்தி பலரும் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளமான மணலை நிலத்திலிருந்து தோண்டி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஹாளய அமாவாசை’- மயிலாடுதுறையில் தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்...!