மேலும் அறிய

Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!

இலக்கிய உலகில் மிக உயரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஞானபீட விருதுக்கு தேர்வாகியிருக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இலக்கிய உலகில் மிக உயரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, 23 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஞானபீட விருதை மண்ணுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன். முதல் விருது 1975ம் ஆண்டு அகிலனுக்கு, 2002ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனும் பெற்றுள்ளனர். 2025ம் ஆண்டுக்கான விருதை நானும் பெறுகிறேன். கால் நூற்றாண்டுக்குப் பின் தமிழுக்கு வாராது போல வந்த மாமணி போல இந்த விருது கிடைத்துள்ளது. இதனை கொண்டாட வேண்டும். இந்தி 12, கன்னடம் 8, மலையாளம் 6, வங்கமொழி  6 ஞானபீட விருதுகளை பெற்றுள்ளது. ஆனால் தமிழுக்கு 3 தான் கிடைத்துள்ளது. இங்கு கவிஞர்களுக்கு பஞ்சமில்லை. தமிழ் மொழி எதற்கும் குறைந்தது இல்லை என தெரிவித்தார். 

இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “கால் நூற்றாண்டு கடந்து நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு கிடைத்துள்ள  ஞானபீட விருது மூலம்  தமிழுக்கு பெரும் பெருமையைஎன் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து சேர்த்துள்ளார்.  நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். ஆனால் வைரமுத்து மீது தொடர்ச்சியாக மீ டூ விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பாடகி சின்மயி கமலை சரமாரியாக சாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கமலுக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி தனது பதிவில், “சினிமாவில் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது தாங்கள் பாலியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டோம் என தெரிவிக்கும் பெண்களை கண்டும் காணாமல் முழுமையாகப் புறக்கணிக்கிறார்கள். இதனைப் பார்க்கும்போது வாக்களிக்கும் பெண்களுக்கு ஆண்கள் ஒருபோதும் நம் பக்கம் இருக்கப்போவதில்லை என்ற விஷயத்தை நினைவுப்படுத்துகிறேன். மனவேதனைக்குள்ளான பல பெண்களைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? என கேள்வியெழுப்பியிருந்தார். 

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், “நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டிய சின்மயி, “அய்யோ.... புரியவே புரியாதா?” என்ற வார்த்தைகளை காட்டமாக பதிவிட்டுள்ளார்.  இதனால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியடைந்து சின்மயியை விமர்சித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget