’மஹாளய அமாவாசை’- மயிலாடுதுறையில் தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்...!
’’கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் நீர்நிலைகளில் கூட்டமாக திரண்டு தர்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது’’
ஆடி அமாவாசை போன்று மஹாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் எள்ளும் தண்ணீரும் கொடுத்து நீர்நிலைகளில் கரைத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு படை எடுப்பதும் வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முன்னேற்பாடு காரணமாக இன்று கடற்கரை, காவிரிக்கரை மற்றும் கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் சிறிது கட்டுக்குள் இருந்தாலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவேரின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா 3 ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில். இதன் காரணமாக தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பரவலை பொறுத்து கட்டுபாடுகளை விதிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புரட்டாசி மகாளய அம்மாவாசை முன்னிட்டு ஆண்டுதோறும் மயிலாடுதுறை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னேர்களுக்களுக்கு தர்பணம் கொடுப்பது வாடிக்கை. புரட்டாசி மகாளய அம்மாவாசை முன்னிட்டு காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க திரண்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை மற்றும் காவிரி ஆறுகளில் பொது மக்கள் கூட தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் தடை உத்தரவை மீறி பொதுமக்கள் காலை முதல் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வருகின்றனர். காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் ஏராளமானோர் காவிரி கட்டத்தில் திரண்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் முன்னதாக கிளாக் கட்டத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வரும் பொதுமக்களை விரைவாக திதி கொடுத்து விட்டு திரும்பும் மாறும் புதிதாக வருபவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )