மேலும் அறிய

காலை உணவு  திட்டத்தின் நோக்கம், கல்வி இடைநிற்றலை தடுப்பதே - மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய அரசு திட்டங்கள் குறித்த டிஜிட்டல் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை  மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்தும் அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, தேசிய ஊட்டச்சத்து மாதம் ஆகியவை குறித்த 2 நாட்கள் டிஜிட்டல் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொங்கிவைத்தார். அப்போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உடனிருந்தனர். தொடர்ந்து மூவரும் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள்.

காலை உணவு  திட்டத்தின் நோக்கம், கல்வி இடைநிற்றலை தடுப்பதே - மயிலாடுதுறை ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளும், அதேபோல், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, குழந்தைகளில் குள்ளத்தன்மை, எடைக்குறைவு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து உணவுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்குரிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கவும், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

35 years of Senthoora Poove : 80'ஸ் இளசுகளின் தூக்கத்தை கலைத்த காதல் காவியம்... கேப்டன் விஜயகாந்த் ட்ரீம் பாய் ராம்கியின் செந்தூரப்பூவே...

காலை உணவு  திட்டத்தின் நோக்கம், கல்வி இடைநிற்றலை தடுப்பதே - மயிலாடுதுறை ஆட்சியர்

ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசானது அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கமே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கி அவர்களின் கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காகவே ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 692 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 38 ஆயிரத்து 367 குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.

7 Years Of Aandavan Kattalai : வாழ்க்கை ஒரு ஒட்டகம்... 7 ஆண்டுகளை நிறைவுசெய்யும் ஆண்டவன் கட்டளை

காலை உணவு  திட்டத்தின் நோக்கம், கல்வி இடைநிற்றலை தடுப்பதே - மயிலாடுதுறை ஆட்சியர்

மேலும், 2,428 பாலூட்டும் தாய்மார்கள், 3819 கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான, ஆரோக்கியமான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதார தாய்மை, மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சரியான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Hilsa Fish: மீன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 3,950 மெட்ரிக் டன் ஹில்சா மீன்கள், இந்தியாவுக்கு இறக்குமதி..

காலை உணவு  திட்டத்தின் நோக்கம், கல்வி இடைநிற்றலை தடுப்பதே - மயிலாடுதுறை ஆட்சியர்

மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ ஊட்டச்சத்து மருந்தினையும் மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினர்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மக்கள் தொடர்பகம் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் கே.தேவி பத்மநாபன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துச்சாமி, மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர உதவியாளர்கள் அருண்குமார், ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

3X3 Senior Basketball: 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர் :காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக ஆடவர் அணி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman on Tax : Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget