Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Ration Shop Employees incentive : ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு கடைசி நேரத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நியாவிலைக்கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நீண்ட நாட்களாக காத்திருந்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்,
பொங்கல் பரிசு- ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் 3000/- ரொக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி,08.01.2026 முதல் 24.01.2026 வரை நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் விதமாக கடந்த காலங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 பைசா வீதம் வழங்கப்பட்டு வந்தது.
நிதி ஒதுக்கிய தமிழக அரசு
இந்நிலையில், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மேற்படி திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி, செயல்படுத்தியதாகவும் அவ்வகையில் நியாய செவ்வனே விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3/- என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.
பணியாளர்களின் கோரிக்கையினை நியாய விலைக் கடை கனிவுடன் பரிசீலித்து, 2026-பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.3/-வீதம் வழங்க ஆணையிட்டுள்ளார்கள். மேலும் இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.6,47,43,054 வழங்க நிருவாக அனுமதி அளித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.























