3X3 Senior Basketball: 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர் :காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக ஆடவர் அணி
சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரின், மூன்றாவது சுற்றில் தமிழக ஆடவர் அணி கேரளாவை 21-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தமிழக ஆடவர் அணி முன்னேறியுள்ளது.
3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர்:
aணிக்கு 3 பேர் இடம்பெறும் 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவில் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் நடத்துகிறது. இப்போட்டியில் ஆடவர் பிரிவில் 30 மாநில அணிகளும் மகளிர் பிரிவில் 26 மாநில அணிகளும் பங்கேற்றுள்ளன.
முதல் சுற்று முடிவுகள்:
லீக் மற்றும் நாக்கவுட் அடிப்படையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் சுற்றில் 72 போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி உத்தரகாண்ட் அணியை 21க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வென்றது. மணிப்பூர் அணியை தெலங்கானா அணி 21 க்கு 5 என்கிற கணக்கிலும், பீஹார் அணியை கேரளா அணி 21க்கு 3 என்கிற கணக்கிலும் வென்றன. அதேபோல் நாகாலாந்து அணியை கர்நாடக அணி 22 க்கு 8 என்கிற கணக்கிலும், அந்தமான் நிகோபார் அணியை தெலங்கானா அணி 22 க்கு 7 என்கிற புள்ளி கணக்கிலும் வெற்றி கொண்டன. மகளிர் பிரிவில் தமிழநாடு பீகார் அணியை 21க்கு 3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. தெலங்கானா அணி, மத்திய பிரதேச அணியை 19க்கு 13 என்கிற கணக்கிலும், டெல்லி அணி கர்நாடக அணியை 18 க்கு 10 என்கிற கணக்கிலும், பாண்டிச்சேரி அணி ஆந்திரா அணியை 12 க்கு 9 என்கிற புள்ளி கணக்கிலும் லீக் சுற்றில் தோற்கடித்தன.
தமிழ்நாடு ஆடவர் அணியின் போட்டியின்போது
இரண்டாவது சுற்று முடிவுகள்:
இரண்டாவது சுற்றில் தமிழ்நாடு ஆடவர் அணியும், பீகார் ஆடவர் அணியும் மோதின. ஆட்டத்தின் முடிவில் 21-13 என்கிற புள்ளி கணக்கில் பீகார் அணியை தமிழ்நாடு ஆடவர் அணி வீழ்த்தியது இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் அணிக்கும் குஜராத் மகளிர் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 19 புள்ளிகள் பெற்றது ஆனால் குஜராத் அணியோ 14 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது .
தமிழ்நாடு ஆண்கள் அணி 3வது லீக் போட்டியில் 21-15 என்ற புள்ளிக் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி, முதலாவது அணியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழ்நாடு ஆடவர் அணியின் போட்டியின்போது
இறுதிப்போட்டி & பரிசுத்தொகை:
இன்று லீக்போட்டிகள் மட்டுமின்றி காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து, நாளை இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் வென்று ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இந்த தொடரில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37-வது தேசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.