Hilsa Fish: மீன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 3,950 மெட்ரிக் டன் ஹில்சா மீன்கள், இந்தியாவுக்கு இறக்குமதி..
வங்கதேசத்திலிருந்து 3,950 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வங்காளதேச அரசு சுமார் 3,950 மெட்ரிக் டன் (MT) ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம், வங்கதேசம் வெளியிட்ட உத்தரவில், " நாட்டிலிருந்து 79 மீன் ஏற்றுமதியாளர்களுக்கு தலா 50 டன் மீன்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான அனுமதி அக்டோபர் 30 வரை செல்லுபடியாகும்.
ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையில் இருந்து விலக்கு அளித்து, வங்காளதேசம் 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பூஜை காலத்தில் ஹில்சா ஏற்றுமதியை அனுமதித்து வருகிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட மீன்களின் அளவு 2019-ல் 500 மெட்ரிக் டன்னிலிருந்து 2023 ல் 3,950 ஆக உயர்ந்துள்ளது" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மீன்களின் முதல் ஏற்றுமதி நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள சந்தைகளை அடைந்தது என்று மீன் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சையத் அன்வர் மக்சூத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “வழக்கமாக 20-30 நாட்களில் இவ்வளவு பெரிய அளவிலான மீன்களை இறக்குமதி செய்வது கடினம், மேலும் குறைந்தது 60 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 2,900 மெட்ரிக் டன் ஹில்சா மீன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், நேரமின்மையால் 1,300 மெட்ரிக் டன் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிந்தது” என குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டுக்கு முன், ஹில்சா மீன் இறக்குமதிக்கு எந்தத் தடையும் இல்லாதபோது, சுமார் 5,000 மெட்ரிக் டன் ஹில்சா மீன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வங்கதேசத்தில் ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மீன் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஹில்சா மீன் கங்கை டெல்டாவில் சுவைமிக்க மீன் வகையாக கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் மீன்களின் விளைச்சல் கடந்த சில ஆண்டுகளாக அதாவது 2001-இல் 80,000 டன்களில் இருந்து 2021-இல் 11,000-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
வங்கதேசம் இந்தியாவுடனான டீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து வருகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா செப்டம்பர் 2022 இல் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின்போது, "இந்தியா எங்களுக்கு போதுமான தண்ணீர் கொடுக்கவில்லை, எனவே என்னால் இப்போது உங்களுக்கு ஹில்சா மீன் வழங்க முடியாது" என்று கூறியிருந்தார். எவ்வாறாயினும், பூஜை காலத்திற்குள் ஹில்சா மீன்களை வழங்க முடியும் என்று உறுதியளித்தார்.
Vanathi Srinivasan: காலில் விழுந்த வானதி சீனிவாசன்.. கடுப்பான பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?