மயிலாடுதுறையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்களால் பரபரப்பு
பேருந்து சரிவர இயங்காததால் கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதாக கூறி மயிலாடுதுறை அருகே பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறையில் இருந்து கோடங்குடி வழியாக நெடுமருதூருக்கு A9 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே கோடங்குடி மார்க்கமாக இயக்கப்படும் இந்த பேருந்து அனைத்து நாட்களிலும் சரியான நேரத்திற்கு இயங்காததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பு அடைந்து வந்துள்ளனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பள்ளி முடிந்து பேருந்து நிலைய மாணவர்கள் வருவதற்கு முன்பே மாலை 4 மணிக்கு பேருந்து இயக்கப்படுவதால் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் காவல்!

அது மட்டுமின்றி காலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக வர வேண்டிய நிலவி வருகிறது. சில நாட்களில் பேருந்து வராமல் இருக்கும் பொழுது, அப்பகுதியில் வேறு வாகன போக்குவரத்து இல்லாததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இது குறித்து பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று கோடங்குடி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tiruppur Mayor : 'திருப்பூர் மேயர் யார்? தினேஷ் - பத்மநாபன் இடையே கடும் போட்டி..!

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாலையில் உரிய நேரத்தில் பேருந்தினை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மதியம் மற்றும் இரவு என கூடுதலாக ஒரு முறை பேருந்தினை இயக்க வேண்டும், தினமும் ஐந்து முறை மயிலாடுதுறை முதல் கோடங்குடி மார்க்கமாக அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் ஈடுபட்டனர்.
உக்ரைனில் சிக்கி உள்ள 20க்கும் மேற்பட்ட தருமபுரி மாணவர்கள் - மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அரசு பேருந்து கோடங்குடி மார்க்கத்தில் உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






















