மேலும் அறிய
உக்ரைனில் சிக்கி உள்ள 20க்கும் மேற்பட்ட தருமபுரி மாணவர்கள் - மீட்டுத்தர பெற்றோர்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

உக்ரைனில் சிக்கி உள்ள தருமபுரி மருத்துவ மாணவர்கள்
கடந்த சில நாட்களாக ரஷ்யாவுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவில் இருந்து சென்றுள்ள மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து உங்களை நான் சென்று மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் அதற்குரிய செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் போதிய வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த நாசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழ்க்குமரன் மகள் கவிநிலவு, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ரேகடஹள்ளி உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த அன்பழகன் மகன் ஜெயக்குமார், தருமபுரி இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் லோகரசன், பொம்மிடியை நிதிஷ்குமார், முரளிதரன், முகமத் உஷேன், நிசாருதீன் மற்றும் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த முர்ஷிதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்து மாணவ, மாணவிகள், உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். தற்போது, உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரால், உக்ரைன் நாட்டில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதில் உக்ரைன் ஸ்விம்மி பல்கலை கழகத்தில் சுமார் 500 இந்திய மாணவ, மாணவிகள் விடுதி மற்றும் தனியார் அறைகளில் தங்கி வருகின்றனர். இந்த ஸ்விம்மி பகுதியில் அடிக்கடி போர் அறிவிப்பு வரும்போது, மாணவ, மாணவிகளை வேறு இடங்களுக்கு இடமாற்ற வருகின்றனர். அந்த இடத்தில் மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திய மாணவர்கள் தங்கியுள்ள பகுதி பெருமளவில் வெளியே தெரியவில்லை.
இந்த இடத்தில் சுமார் 150 மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர்.எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மருத்துவ மாணவர்களையும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் சார்பில், மாநிலத் தொடர்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ்-க்கு நேற்று அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே விரைந்து இந்திய மருத்துவ மாணவ, மாணவிகளை மீட்டு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















