தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
பொதுவாக பசுக்கள் மிகவும் அமைதியான, பொறுமையான குணம் கொண்ட கால்நடைகளாகும். அவை தங்களை பராமரிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு பழகும் தன்மை உடையவை. பசுபதிக்கோவில்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை பசுமாடு ஈன்றுள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
பொதுவாக பசுக்கள் ஒரே நேரத்தில் ஒரு கன்றையே ஈன்றும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இரட்டை கன்றுகள் பிறக்கும் நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பசுவின் கர்ப்பக்காலம் சுமார் 9 மாதங்கள் முதல் 9½ மாதங்கள் வரை இருக்கும். சரியான பராமரிப்பு மற்றும் சத்தான தீவனங்கள் வழங்கப்பட்டால், ஒரு பசு 12 முதல் 15 மாதங்களுக்கு ஒருமுறை கன்று ஈன்றும் திறன் கொண்டது.

நல்ல பராமரிப்பில் ஒரு பசு தனது வாழ்நாளில் சுமார் 8 முதல் 12 கன்றுகள் வரை ஈன்றும் என்று கால்நடை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் பசுக்கள் ஆரோக்கியமாக இருக்க தடுப்பூசிகள் மற்றும் சீரான மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படும் என்பதும் அவசியமான ஒன்றாகும்.
கன்றுகள் பிறந்த உடனே அவற்றிற்கு தேவையான பராமரிப்பு மற்றும் சத்தான உணவு வழங்கினால், கால்நடை வளர்ப்பில் நல்ல பலன் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசு மாடுகள் இயல்பாக ஒரு கன்றை மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடையது. சில இடங்களில் அபூர்வமாய் இரண்டு கன்றுகள் பிரசவிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுவதும் உண்டு. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கள்ளர் பசுபதிகோவில் பகுதியில் ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்றுள்ளது ஒரு பசு மாடு. இதனால் மாட்டின் உரிமையாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
பசுபதிகோவில பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (70). இவரது மனைவி பிச்சை மாணிக்கம் (60). இந்த தம்பதி இரண்டு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகின்றனர். நாகராஜன் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் சுமார் 40-ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று சினையாக இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த பசுமாடு ஒன்றின்பின் ஒன்றாக இரண்டு கன்றுகளை ஈன்றது.
இதனை கண்ட மாட்டின் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். பசுவும் கன்றுகளும் ஆரோக்கியத்துடன் உள்ளன. விவசாயத்துடன் இணைந்த முக்கிய தொழிலாக கால்நடை வளர்ப்பு விளங்குகிறது. குறிப்பாக பசு வளர்ப்பு கிராமப்புறங்களில் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
பசு மனித சமுதாயத்துடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வரும் முக்கிய கால்நடையாகும். விவசாயம், பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்க்கையில் பசுக்களுக்கு முக்கிய இடம் உள்ளது. பசுக்களின் இயல்பும், நடத்தையும் மிகவும் அமைதியானதும் மனிதர்களுக்கு நெருக்கமானதுமாக இருக்கும்.
பொதுவாக பசுக்கள் மிகவும் அமைதியான, பொறுமையான குணம் கொண்ட கால்நடைகளாகும். அவை தங்களை பராமரிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு பழகும் தன்மை உடையவை. தினமும் உணவு அளிக்கும் விவசாயிகளை பசுக்கள் விரைவாக பழகிக் கொள்ளும். இத்தகைய பசுக்கள் எப்போதாவதுதான் அரிதான நிகழ்வாக 2 கன்றுகளை ஈன்றும். தற்போது பசுபதிகோவில் பகுதியில் விவசாயி வீட்டில் 2 கன்றுகளை பசுமாடு ஈன்றுள்ளது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.























