Controlling Sperm Ejaculation : விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்தினா, குழந்தை பிறப்பில் சிக்கலை ஏற்படுத்துமா? : மருத்துவர் விளக்கம்
விந்தணு வெளியேற்றப்பட வேண்டும் என்பது உங்கள் உடலுக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பது மட்டுமே.
இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை என்பது இயந்திரத்தனமாக மாறிவிட்டது. உடலைப் பேணிக் காப்பதற்கும், அதோடு உரையாடுவதற்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது. அதைக் கவனிக்கவும் தவறிவிடுகிறோம். இப்படியிருக்க, உடலில் இருந்து அடிக்கடி விந்தணுக்கள் வெளியேறுவது உடல் வலிமையைக் குறைக்கும்; உடலில் இருந்து விந்தணுக்களை வெளியேறாமல் போனால் ஆபத்து, சுய இன்பம் நல்லதா? கெட்டதா? இதுபோன்ற பல கேள்விகள் ஆண்களிடம் இருக்கின்றன.
இன்னும் சிலருக்கோ இயல்பாகவெ விந்தணுக்கல் வெளியேறினால் அதன் அளவு குறைந்துவிடும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்பது போன்ற தவறான எண்னங்கள் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இது குறித்த தகவல்களை ஆண்கள் தேடித் தேடி தெரிந்துகொள்கின்றனர்.ஆனால் அதில் எல்லாமும் உண்மையான தகவல் கிடையாது. உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது போலவே, நம் பிறப்புறுப்பு,பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும். இப்போது விந்தணு வெளியேறுதல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர் ரேச்சல் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொன்ன பதில்களை தெரிந்துகொள்வோம்.
தூக்கத்தில் விந்தணு வெளியேறினால் அதன் எண்ணிக்கை குறையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்பது போன்றவைகள் உணமை இல்லை. அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை. ஒருவர் உடலுடம் உரையாட வேண்டும். உங்கள் உடல் என்ன சொல்கிறது, அதன் தேவை என்ன என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். விந்தணு வெளியேற்றப்பட வேண்டிய நேரத்தில் அதை செய்வதில் எந்தவித தவறும் இல்லை. உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். உடலிலிருந்து விந்தணு வெளியேற்றப்பட வேண்டும் என்றால் அது நிகழ்வது நல்லதுதான். ஆனால் உடல்ரீதியிலாக பலவீனமாக இருப்பவர்கள்,ஆஸ்துமா இருப்பவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடும் பணிச்சூழல் இருப்பவர்கள் ஆகியோர் உடலில் இருந்து அதிக அளவு விந்து வெளியேறுவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதனால் இவர்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப விந்தணு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது சரியானதே.
அதற்கு இப்பிரச்சனைகள் இல்லாதவர்கள் உடலில் இருந்து அதிக அளவில் விந்தணு வெளியேறினால் பாதிப்பு இல்லையா என்று கேட்டால், பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அளவுக்கு மீறினால் எதுவும் ஆரோக்கியமற்றதுதான். பதின்வயதினர் முதல் பெரியவர்கள் வரை இரவு தூக்கத்தில் விந்தணு வெறியேறுதல் இயல்பானது. புதிய அணுக்கள் உருவாவதற்கான நிகழ்வு இது. இதற்கும் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலவே, விந்தணு வெளியேறுதலை கட்டுப்படுத்துவதால் குழந்தை பிறப்பத்தில் எந்த சிக்கலும் இருக்காது.
விந்தணு வெளியேற்றப்பட வேண்டும் என்பது உங்கள் உடலுக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பது மட்டுமே என மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா ஒரு தனியார் யூ ட்யூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )