மேலும் அறிய
Advertisement
கடன் பிரச்சினை: அதிமுக ஊராட்சித் தலைவர் தற்கொலை!
முருகானந்தம் தொலைபேசிக்கு யார் யார் தொடர்ந்து பேசி உள்ளனர் என்பதை விசாரிக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவலர்கள் முருகானந்தம் தொலைபேசிக்கு வந்த தொடர்புகள் குறித்தும் விசாரணை
திருவாரூரில் கடன் பிரச்சினையால் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை காவல்துறையினர் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் வயது 45. இவருக்கு இந்திரா என்கிற மனைவியும் ஐஸ்வர்யா, பேபி ஷாலினி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெடுஞ்சேரி ஊராட்சியில் அதிமுக சார்பில் முருகானந்தம் போட்டியிட்டு முருகானந்தம் நெடுஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சேரி பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் உடனடியாக முருகானந்தத்தின் வீட்டிற்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் குடவாசல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மேலும் பூச்சிமருந்து குடித்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
உடனடியாக குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டதில் முருகானந்தம் பல லட்ச ரூபாய் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டுள்ளதாகவும் பணத்தை கொடுக்க முடியாத காரணத்தினால் விரக்தியில் இருந்த முருகானந்தம் அதன் காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். பின்னர் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த முருகானந்தத்திற்கு யார் யார் கடன் கொடுத்து உள்ளார்கள் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடன் கொடுத்தவர்கள் தான் தொடர்ந்து முருகானந்தத்தை தொந்தரவு செய்தார்களா மேலும் முருகானந்தம் அவர்களுடைய தொலைபேசிக்கு யார் யார் தொடர்ந்து பேசி உள்ளனர் என்பதை விசாரிக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவலர்கள் முருகானந்தம் அவர்களின் தொலைபேசிக்கு வந்த தொடர்புகள் குறித்தும் விசாரணை செய்து வருகின்ற நிலையில் கடன் தொல்லை காரணமாக மட்டுமே தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் குடவாசல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவர்கள் அறிக்கை தந்ததற்கு பின்னரே முருகானந்தம் உயிரிழந்தது குறித்து முழுமையான காரணங்கள் தெரியும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடன் பிரச்சினை காரணமாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion