மனோரா கடற்கரையில் கடல்பசு பாதுகாப்பு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்
தெற்கு நாட்டாணிக்கோட்டையில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை, ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால், சிறுபாலம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரையில் கடல் பசு பாதுகாப்பு மையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பேராவூரணி அடுத்த மனோராவில், TN-SHORE திட்டத்தின் கீழ் ரூபாய் 40.94 கோடி மதிப்பீட்டில், உலகத் தரத்தில், இந்தியாவின் முதல் சர்வதேச கடல்பசு பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு கடந்த 17.02. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கலை நாட்டினார்.
இத்திட்டம் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகளுக்காக ரூபாய் 40.94 கோடி தொகை அனுமதிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் வளைகுடா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சுற்றுச்சூழலினை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனோரா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்சி வன மண்டலம், வனப் பாதுகாவலர் காஞ்சனா தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடல் பசு பாதுகாப்பு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் நே.பிரவீன், வனவர் ஆர்.ராஜ்குமார், ரதி பாரதி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், மல்லிப்பட்டினம் லைட் ஹவுஸ் இன்சார்ஜ் குகானந்தம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் ரமேஷ் பாபு, ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் பாலாஜி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ஜே.பியூலா, கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஏ.ஜெயபால், செய்யது, ஹபீப் முகமது, சண்முகம், சின்னையன், பத்மநாதன், தாமரை மற்றும் கிராம மக்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் புதிய பேருந்து வசதி தொடக்கம்
பேராவூரணியில் புதிய பேருந்து வசதி மற்றும் வளர்ச்சிப் பணிகளை எம்.பி, ச.முரசொலி மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் தொடக்கி வைத்தனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் பேரூராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
தெற்கு நாட்டாணிக்கோட்டையில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை, ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால், சிறுபாலம், வடக்கு நாட்டாணிக்கோட்டையில், பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால், பேரூராட்சி 6 ஆவது, மீன் மார்க்கெட் அருகே, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.
ரூ.28.75 லட்சம் மதிப்பீட்டில் பொன்னாங்கண்ணிக்காடு அய்யனார் கோயில் தார்ச்சாலை, 18 ஆவது வார்டு ஆதனூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட், அப்துல் கலாம் நகரில் வடிகால் வசதி மற்றும் சிறு பாலம், களத்தூர் ஊராட்சி சித்துக்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் ரூ.17.90 லட்சத்தில் என மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலையில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன். கோ.இளங்கோவன், குழ.செ.அருள்நம்பி, செ.ஞானப்பிரகாசம், ஆர்.பன்னீர் செல்வம், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், ஆர்.மாரிமுத்து மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























