மேலும் அறிய

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி விநியோகம் முறையாக நடைபெறவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் அளிப்பதாக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை வாடிக்கையாளர்களுக்கு ரூ.140+GST என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது.

மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது மிக குறைந்த கட்டணம் ஆகும். குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வந்தாலும், மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பல்வேறு விதமான சிக்கல் நீடிப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உரிய முறையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அரசின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள அரசு கேபிள்டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டு பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ, அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ, இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸை வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதனை வேண்டும். அவர்கள் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க ஒரு சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப் பாக்ஸ்களை பெற்று கொண்டு, அதை பொது மக்களுக்கு வழங்காமல், தங்கள் சுய லாபத்திற்காக, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமலும், அவ்வாறு செயலாக்கம் செய்யாத செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Embed widget