MK Stalin Speech: ’மக்களோடு இருந்தால்... மக்களுக்காக இருந்தால்...’- உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை !
உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர்களுக்கான பயிற்சி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் தேர்வாகியுள்ள மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கான தேர்தல் அன்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மேயர், கவுன்சிலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பு உரையாற்றி வருகிறார். அதில், “திமுக ஆட்சியில் இருந்த போது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளது. இம்முறை உள்ளாட்சித் தேர்தல் எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மக்கள் எளிதாக அனுகும் வகையில் செயல்பட வேண்டும். மக்களோடு இருந்தால், மக்களுக்காக இருந்தால் என்ற நிலையில் நீங்கள் பணியாற்றினால் மக்களிடம் இருந்து உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். இந்த வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக கிடைத்துவிடாது. மக்களுடைய நம்பிக்கையை நாள்தோறும் நீங்கள் பெற வேண்டும். மக்களாட்சி தத்துவத்தை சரியாக பின்பற்றி நீங்கள் செயல்பட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியாக கருதாமல் பொறுப்பாக கருத வேண்டும்.
https://t.co/dXf9B1gKK4
— TN DIPR (@TNDIPRNEWS) April 13, 2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் நடைபெறும் மாமுதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகம் நிறைவு விழாவில் விழாப் பேருரையாற்றுகிறார்கள்#CMMKSTALIN @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @KN_NEHRU
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73ஆவது முறையாக திருத்தப்பட்டு இந்தியா முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் அமைக்க வழிவகை செய்யப்பட்டது. அதன்பின்னர் முதல் முறையாக 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது 1996ஆம் ஆண்டு சென்னை மாநாகராட்சியின் மேயராக நான் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான் தான்.
நகராட்சித்துறைக்கு அமைச்சராக நேருவை நான் தேர்ந்தெடுக்க அவருடைய வேகம் தான் காரணம். ஏனென்றால் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உடனடியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து உடனடியாக அதை செய்து காட்டியுள்ளார். இந்தப் பயிற்சியில் அனைவரும் அளித்த அறிவுரைகளை கேட்டு நீங்கள் மக்களாட்சி தத்துவத்தை மீறாமல் நடைபெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்