மேலும் அறிய
சொந்த இடங்களை அளக்க இனி கஷ்டப்பட வேண்டாம்.. வந்தாச்சு ஈசியான வழி.. முழு விபரம் இதோ !
வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை
Source : pexels
நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடும் முறை
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen 6 வசதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொது மக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணையவழிச்சேவையின் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில், இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி. நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம்' நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/என்ற பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய வழிச்சேவையின் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்”.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sellur Raju : மும்மூர்த்தி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. அமைச்சரை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Flower market price today : அதிரடி முகூர்த்தம்.. ஆனாலும் மதுரையில் பூக்கள் விலை உயரவில்லை ஏன் தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion