Annamalai Tweet : கூட்டாட்சி என்பது ஒரு வழிப்பாதை அல்ல... அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை..
பிரதமர் மோடி பேசிய வீடியோ கட்சியை இணைத்து தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
![Annamalai Tweet : கூட்டாட்சி என்பது ஒரு வழிப்பாதை அல்ல... அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை.. Tamil Nadu BJP Annamalai posted Twitter page blaming the Tamil Nadu government Annamalai Tweet : கூட்டாட்சி என்பது ஒரு வழிப்பாதை அல்ல... அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/27/618e9211e82416815e45ad89c8eaa3c0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி பேசிய வீடியோக் கட்சியை இணைத்து தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு குறைத்துள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநிலங்களுக்கு கோரிக்கை வைத்தார்.
Our Hon PM Shri @narendramodi avl requesting states to reduce petrol & diesel prices in tune with the central govt’s reduction 6 months back!
— K.Annamalai (@annamalai_k) April 27, 2022
States like T N has made reducing fuel prices as a election promise & yet to fulfil it!
Cooperative federalism is not a one way street! pic.twitter.com/NFnNXcVJ1H
ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியாக அளித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை! கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)