HBD Rajinikanth: "நண்பர் ரஜினிகாந்த் பல்லாண்டு வாழ வேண்டும்.." சூப்பர்ஸ்டாருக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து...!
HBD Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
HBD Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இன்று தனது 73வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது, ” என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகினரும், பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.