மேலும் அறிய

Covid 19 Mega Camp: ‛இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை...’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு இந்த வாரம் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 18 வாரங்கள் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக தமிழ்நாட்டில் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Covid 19 Mega Camp: ‛இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை...’  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

முன்னதாக, கொரோனா தொற்று தொடர்பாக சென்னையில் நேற்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரானும், 15 சதவீதம் பேருக்கு டெல்டாதான் வருகிறது. 100 பேருக்கு கொரோனா உறுதியானால் 85 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புதான் இருக்கிறது. ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், மரபணு சோதனை கைவிடப்பட்டது. டெல்டாவும் ஒமிக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான பாதிப்பு இருப்பதால் வீட்டுத்தனிமையில் உள்ளனர்” என்று கூறியிருந்தார்.

மேலும், மெகா கொரோனா தடுப்பூசி முகாமை இந்த வாரத்துக்கு பதில் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க ஆலோசனை செய்து வருவதாகவும், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் விடுமுறை என்பதால் அடுத்தவாரம் முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும், இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை என்றும், பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக கூறிய அமைச்சர், தற்போதுள்ள ஊரடங்கே போதுமானது என்றும் கூறினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget