Train cancelled: மீண்டும் ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்.. பயணிகளே உஷார்!!
Chennai Central - gummidipoondi : சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி இடையே வருகின்ற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை புறநகர் மற்றும் சென்னை மாநகர் பகுதியை இணைக்கக்கூடிய முக்கிய போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்தநிலையில் பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை இடையே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பாதைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை (13-03-2025) மற்றும் 15-03-2025 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் :
காலை 8 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 9:30 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 8:35 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10:15 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:10 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:05 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை
காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகல் 12:40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சூலுார்பேட்டை - நெல்லுார்
மாலை 3:50 மணிக்கு சூலுார்பேட்டை - நெல்லுார் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல்
காலை 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது .
காலை 11:25 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
காலை 12:00 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை
காலை 10:55 செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
நெல்லுார் - சூலுார்பேட்டை
மாலை 6:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சூலுார்பேட்டை -சென்னை சென்ட்ரல்
காலை 11:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:00 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 1:15 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 2:30 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாலை 3:15 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இரவு 9:00 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்
கும்மிடிப்பூண்டி - தாம்பரம், மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





















