வன்கொடுமை பாதிப்பு :12 லட்சம் ரூபாயாக நிதியை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 12 லட்சம் ரூபாய்வரை வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை வேப்பேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல், பெரியார் ஒளி விருது வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசுக் கட்சித் தலைவர் பி.வி. கரியம்மாளுக்கும், காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமதுவுக்கும், செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் ராமசாமிக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாய கண்ணோட்டத்துடன் அணுகி நிவாரணம் வழங்க நடவடிக்கை. அவர்களுக்கு முறையான நிவாரணமும், வளமான எதிர்காலமும் வழங்க தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் சமத்துவம் காண்போம் என்ற தலைப்பில் காவல் துறை, வருவாய் துறையினருக்கு நடத்தப்படும்.
திராவிட - அம்பேத்கரிய - பொதுவுடைமைக் கொள்கைகளின் வழித்தடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதே என் கடமை என நான் செயலாற்றுவதை 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கி சிறப்பித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் சகோதரர் @thirumaofficial அவர்களுக்கும் நன்றி!https://t.co/ZHRG5uz1JL pic.twitter.com/0BWzpDhjv8
— M.K.Stalin (@mkstalin) December 24, 2021
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின்தன்மைக்கு ஏற்றவாறு 85,000 ரூபாயிலிருந்து 8 லட்சத்து 25,000 ரூபாய்வரை தற்போது வழங்கப்படுகிறது. அது இனி குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 12 லட்சம் ரூபாய்வரை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதி பயணத்திலும் பிரிவினை இருக்கக்கூடாது என்பதால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ரூ 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Periyar | வேறோடு பெயர்த்த கடப்பாரை.. தந்தை பெரியார் ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறார்..