மேலும் அறிய

Periyar | வேறோடு பெயர்த்த கடப்பாரை.. தந்தை பெரியார் ஏன் இன்றும் கொண்டாடப்படுகிறார்..

பெரியார் ஏன் இன்றும் போற்றப்படுகிறார் என்பதற்கு பெரியார்தான் சாட்சி.

பெரியார் ஏன் இன்றும் போற்றப்படுகிறார் என்பதற்கு பெரியார்தான் சாட்சி.

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் பிறந்தவர் ராமசாமி நாயக்கர். சமூக சீர்திருத்த, சுயமரியாதைக் கொள்கைகளுடன் வளர்ந்த அவர் 1929ல் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த நாயக்கர் எனும் சாதிப் பெயரைத் துறந்தார்.

காசிக்கு சென்று திரும்பினால் எதையாவது துறக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைக்காக அல்ல தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் பெரியார் காசிக்கு சென்று திரும்பியபின்னர் கடவுள் நம்பிக்கையையே துறந்தார். வாரணாசி சத்திரங்களில் பிராமணர் அல்லாதோருக்கு உணவு மறுக்கப்பட்டதால் அவர் கடவுள் மறுப்பாளரானார். அப்படிப்பட்ட கடவுள் மறுப்பாளரை இன்றும் சாதி, மதம் கடந்து பலரும் கொண்டாடுகின்றனர். ஆட்டோவில் சாமிப்படங்களும், வீட்டில் பூஜைகளும் செய்பவர் கூட பெரியார் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகிறார். நெற்றியில் இருக்கும் பட்டையோ, கழுத்தில் இருக்கும் சிலுவையோ கடவுள் மறுப்பாளானரா பெரியாரை வெறுக்கவில்லை. காரணம் அவரது சுயமரியாதை, சமூக நீதிக் கொள்கைகள்.

பெரியார் ஒரு காங்கிரஸ் காரியதரிசியாகத் தான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். திருநெல்வேலியில் விவிஎஸ் ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோருக்கு தனித்தனியாக உணவுவிடுதி நடத்தப்படுவது தொடர்பாக காந்தியுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இதில் காங்கிரஸை சமாதானப்படுத்த முடியாததால் பெரியார் காங்கிரஸில் இருந்து விலகினார்.

1925ல், அவர் தன்னை நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த இயக்கம் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது.

கேரளாவின் வைக்கோம் கோயிலுக்கு எதிரான பாதையை பொதுப் பாதையாக அறிவிக்கக் கோரிய போராட்டத்தில் கைதாகி சிறை சென்றார். அதில் வெற்றி பெற்றதால் வைகோம் வீரர் என்றழைக்கப்பட்டார். தேசிய அடையாளம் வேண்டாம் தமிழ் அடையாளம் தான் வேண்டும் என்ற கொள்கையின்பால் நடந்தார். இந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய சுதந்திர திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்தார். இப்படி தன் வாழ்நாள் பல்வேறு சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுத்த பெரியார் இன்று தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தியலாக இருக்கிறார். பெரியார் என்ற மாமனிதர் மக்களின் மனங்களில் ஒரு கொள்கையாக வாழ்கிறார். அவர் விதைத்த சமூக நீதி, சுய மரியாதை, மொழிப் பெருமை ஆகியன தான் இன்றும் அவரை இளைஞர்களின் கதாநாயகராக வைத்திருக்கிறது. பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க அவர் முன்னெடுத்த போராட்டங்கள் ஏராளம். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரியாரின் கருத்துகள் சமூக புரட்சியை உண்டாக்கக் கூடியவை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget