HOLIDAY: ஜனவரி 7ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
Nilgiris District Local Holiday: பள்ளி மற்றும் அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறையை தவிர்த்து கோயில் திருவிழாக்கள், குரு பூஜைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற ஜனவரி 7ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை மறுதினம் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 5ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதன் காரணமாக கிறஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெற்றோர்களோடு வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி உள்ளூர் விடுமுறை
இதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஹெத்தையம்மன் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் மிகப்பெரிய மற்றும் புனிதமான திருவிழா ஆகும், மார்கழி மாத பௌர்ணமிக்கு பின் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், படுகர் மக்கள் தங்கள் ஏழு மூதாதையர்களை ஹெத்தப்பா மற்றும் ஹெத்தா என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். 07.01.2026 (புதன்கிழமை) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு "உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
24ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பணி நாள்
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமை அன்று கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் நீலகிரி மாவட்டத்தில் பணி நாளாகவும் அறிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.





















