BREAKING LIVE: பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைக்கப்படாது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழகம் மற்றும் இந்தியாவில் நிகழும் மிகவும் முக்கியமான செய்திகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
”ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம்" என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.
பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைக்கப்படாது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைக்கப்படாது. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நிதிநிலைமை மோசமாக உள்ளதால் விலை குறைப்பு தற்போது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை - தமிழக அரசு
உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு - செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், டெண்டர் கோரி உள்ளது தமிழ்நாடு அரசு