"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் மா சுப்பிரமணியன் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வுக்கு காங்கிரசும், மற்ற கட்சிகளும் முட்டு கொடுப்பது கேவலமாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சம்பவத்தை முன்வைத்து இரண்டாவது நாளாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, "கள்ளச்சாரய வியாபாரத்தில் குற்றவாளிகளான இரண்டு தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.க மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் காப்பாற்ற முயல்கிறார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சம்பவம்: இது குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். 28 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். இது பற்றி விவாதிக்காமல் எது பற்றி விவாதிப்பது. ? தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும், மற்ற கட்சிகளும் முட்டு கொடுப்பது கேவலமானது. மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "மது அருந்தியவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும்,
சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன என்பது குறித்து அறிய பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி தரவில்லை. கிடைத்த தகவலின் படி 183 பேர் பாதிக்கப்பட்டு, 55 பேர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது.
அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கிறது. விஷ முறிவு மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை என குற்றம்சாட்டினார். கள்ளச்சாரயம் குடித்து தாமதமாக வந்ததால் உயிரழப்பு நிகழ்ந்தது என்கிறார்கள். அதற்கு அரசு தான் காரணம்.
"மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல்" கள்ளச்சாரயத்தால் இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாக கூறியதால் தான் உயிரழப்பு அதிகரிக்க காரணம் என தெரிவித்தார். உயிரழந்தவர்கள் கள்ளச்சாரயத்தால் இறக்க வில்லை என மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல் தான் கள்ளச்சாரய மரணம் அதிகரித்தது காரணம்.
திமுக, கூட்டணி கட்சியினர் கள்ளச்சாராயம் விவகாரம் முதல்வர்களுக்கு தெரியாது என கூறுவது ஏற்க முடியாது. திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. நீதி கிடைக்க வேண்டும் என்றால் CBI விசாரணை வேண்டும் நடத்த வேண்டும்.
ஒரு நபர் விசாரணையில் உண்மை வெளி வராது. உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும். என்றால் CBI விசாரணை வேண்டும். இது மக்களின் பிரச்சனை, உயிர் சென்று கொண்டிருக்கிறது இதை விட முக்கிய பிரச்சனை என்ன உள்ளது.
கடந்த காலத்தில் சட்டபேரவையில் திமுகவினர் எப்படி நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும்.
திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதற்க்கு 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுவிட்டதால் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் பேச மறுக்கிறது" என்றார்.