மேலும் அறிய

TN Agri Budget 2023 : 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்...யார் யாருக்கு தெரியுமா...வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு...!

வரும் ஆண்டு முதல் 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

TN Agri Budget 2023 : வரும் ஆண்டு முதல்  10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2023

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாட்டின் 2023-2024ம் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை  நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்களை கேட்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

அதில் குறிப்பாக, வரும் ஆண்டு முதல்  10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, 

பழங்கள், நார்ச்சத்து நிறைந்தவை, இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துபவை, இதய நோயைக் குறைப்பவை, பக்கவாதத்தைத் தடை செய்பவை, செரிமானப் பிரச்சினையைச் சரிபடுத்துபவை, கண் பார்வையைக் கூர்மையாக்குபவை. ஓர் உணவில், வெண்மை, பசுமை, பழுப்பு நிறமும், சிவப்பு நிறமும், மஞ்சள் நிறமும் சரியான விகிதத்தில் இருப்பதே சமச்சீரான உணவுக்கு அடையாளம். அத்தகைய உணவை வழங்குவதில் கனிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாடு, உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைய பழங்களின் உற்பத்தி முக்கியம். பருவத்திற்கேற்ப இயற்கை நமக்குத் தேவையான பழங்களை உற்பத்தி செய்து தருகிறது. கோடையில் குளிர்ச்சியான பழங்களையும், குளிர் காலத்தில் உடலை வெப்பத்தில் வைத்திருக்கும் பழங்களையும் தருவித்துத் தருகின்ற அமுதசுரபியாகத் திகழ்கிறது இயற்கை.

எனவே, வரும் ஆண்டில் பத்து லட்சம் குடும்பங்களுக்கு மாங்காய், கொய்யாப் பழம், பலாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.15 கோடி நிதியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும் என்று அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

TN Agri Budget 2023 LIVE: வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு - அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget