Coonoor Chopper Crash: ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல்..
முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல் கிடைத்துள்ளது.
![Coonoor Chopper Crash: ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல்.. Chopper Crash Ooty, CDS Gen Bipin Rawat, his staff, some family members were in chopper coonoor army helicopter crash Coonoor Chopper Crash: ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/8314aefc7d6d68a2f72d4ca4568aebbc_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல் :
மதுலிக்கா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால்.
Army Chief General MM Naravane briefs Defence Minister Rajnath Singh over the incident of the crash of a military chopper in Tamil Nadu, that was also carrying CDS Gen Bipin Rawat.
— ANI (@ANI) December 8, 2021
(File photos) pic.twitter.com/SOs4egK6Bs
முன்னதாக விபத்து நடந்ததை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிபின் ராவத் வீட்டுக்கு சென்று அவரது மகள் கிருத்திகாவை சந்தித்து பேசினார். அவர் விரைவில் தமிழ்நாடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர் கே.என். நேரு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் குன்னூர் சென்றிருக்கின்றனர்.
மேலும் படிக்க..
Chopper Crash | பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை; விபத்து குறித்து விளக்கியதாகத் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)