மேலும் அறிய

தடுப்பூசி போட்டா தியேட்டருக்கு வாங்க.. டிக்கெட் பணம் ரிடர்ன் இல்ல - புதிய ரூல்.!

குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி போட்டால்தான் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் அனுமதி என்ற புதிய விதிமுறையை  PVR போன்ற திரையரங்குகள் அறிமுகம் செய்துள்ளன.

திரைப்படத்துக்கான முன்பதிவுக்கு க்ளிக் செய்தால் அரசு அறிவிப்பு தொடர்பான நோட்டிபிகேஷன் வருகிறது. அதன்படி, அரசின் உத்தரவின்படி சினிமா திரையரங்குக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் முக்கியம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் திரையரங்கில் சோதனை செய்யப்படும். தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் திரையரங்குக்குள் அனுமதி இல்லை. அவர்களின் டிக்கெட் கட்டணமும் திரும்ப செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது 

கொரோனா தடுப்பூசி போடாமல் பொது இடங்களுக்கு செல்வது குறித்து ஏற்கெனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பொது வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

தடுப்பூசி போட்டா தியேட்டருக்கு வாங்க.. டிக்கெட் பணம் ரிடர்ன் இல்ல - புதிய ரூல்.!

தமிழ்நாடு அரசின் இந்த அறிவுறுத்தலின் பேரில் திரையரங்குகள் எடுத்த இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றனர். இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் என்றும், இதன் மூலம் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில்

இந்த நடவடிக்கைக்கு சினிமாத்துறையின் ஒரு தரப்பினரும், பொதுமக்களுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் இருக்கை அமலில் இருந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான நேரம் 100% இருக்கை அனுமதிக்கப்பட்டது. மக்கள் திரையரங்குக்கு வரத் தொடங்கினர். தற்போது மீண்டும் திரையரங்குகளுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் மக்களை யோசிக்க வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தியேட்டர் வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்பது நடைமுறையில் சிக்கலை உண்டாக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ரீட்வீட் செய்துள்ள ட்வீட்களில்,  ''

ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் பரவாதா #கோவிட்19 இப்போது பரவி விடுமோ! என்ன ஒரு பயம்!! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget