TVK Vijay: பிரான்ஸில் TVK கட்சிக்கு ப்ரமோஷன்! தவெக கொடியுடன் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியுடன் இளைஞர்கள் பிரான்ஸ் நாட்டின் வீதியில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்த விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
பிரான்ஸ் நாட்டில் விஜய் பாடலுக்கு நடனம்:
கட்சி தொடங்கிய பிறகு விஜய்க்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. அவர் தனது கொள்கைகள், கோட்பாடுகளை அறிவித்த பிறகு அவருக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் குவிந்தது. ஆனாலும், அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவர்கள் தங்களது ஆதரவை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
TVK Flag in France...💥🔥🔥💥 pic.twitter.com/VL7YMyY2oY
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) January 18, 2025
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டில் வாழும் சில இளைஞர்கள் ( தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) தவெக- கொடியுடன் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். விஜய்யின் தவெக-வின் பாடலான வீரக்கொடி.. வெற்றிக் கொடி.. விஜயக் கொடி பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் வீதியில் தவெக கொடியை கையில் ஏந்தி நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரந்தூரில் நாளை விஜய்:
நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கிய பிறகும் அவர் முழு வீச்சில் இன்னும் அரசியல் செயல்பாட்டில் இறங்கவில்லை. அவர் தனது கடைசி படத்தின் படப்பிடிப்பில் முழு வீச்சில் உள்ளார். இந்த சூழலில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மக்களை அவர் நாளை சந்திக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே உள்ள நிலையில், விஜய் தீவிர பரப்புரையிலும், அரசியல் களத்திலும் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தாலும் பொதுவெளியில் மக்கள் நலனுக்காக நேரடியாக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் அவரது அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது? என்பதை தமிழக அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

