மேலும் அறிய

Rajya Sabha Election: ‛அதிமுகவிற்கு ஒருமனதாக ஆதரவு’ மாநிலங்களவை தேர்தல் முடிவை அறிவித்தது பாமக!

Rajya Sabha Election: ‛முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்கள்,’

நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத்(ராஜ்யசபா) தேர்தலில், இரு எம்.பி.,களை பெறுவதற்கு போதுமான எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிமுகவுக்கு உள்ளது. இந்நிலையில், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக பாமக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: 

Rajya Sabha Election: ‛அதிமுகவிற்கு ஒருமனதாக ஆதரவு’ மாநிலங்களவை தேர்தல் முடிவை அறிவித்தது பாமக!
‛‛பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை மருத்துவர் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினரும் கேட்டுக் கொண்டனர்.

அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா அவர்கள், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்று அந்த அறிவிப்பில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 
இதன் மூலம் அதிமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தேர்வாவது உறுதியாகியுள்ளது. முன்னதாக நடந்த தேர்தலில், அதிமுக ஆதரவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேர்தல் தொடர்பாக முன்பு வெளியான அறிவிப்பு இதோ: 
 
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்கள் அவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள் உட்பட 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதிகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலி இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா, அல்லது பிரதான கட்சிகளே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை தற்போது பதவிக்காலம் முடியும் உறுப்பினர்களைத் தவிர கூடுதலாகவே ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசு தலைவர் தேர்தல் மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படும் என்பதால் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரும் 24ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத்தாக்கல், 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூன் 03ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget