மேலும் அறிய

பாஜக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சியிலும் கட்சித்தாவல் தடை சட்டம் வரும் - பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழகச் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரலாம். வர வேண்டும் என பாஜக விரும்புகிறது

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, திருச்சி ஜமால் முகமது, பெரியார் ஈ.வெ.ரா., உருமு தனலட்சுமி ஆகிய கல்லூரிகளின் தமிழாய்வுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ் இலக்கியங்களில் அறம் என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின்  தொடக்க விழாவில்  துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் கருத்துரையாற்றினார். பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இரா. காமராசு, சி. அமுதா, அரங்க. பாரி, பேராசிரியர் ஜெ. தேவி ஆகியோர் பேசினர். மலேசிய நாட்டின் இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் சு. குமரன், சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழக முனைவர் சீதா லட்சுமி இணையவழியில் பேசினர். முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றார்.

பாஜக மாநிலப் பொதுச் செயலரும், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக மதிப்புறு பேராசிரியருமான இராம. சீனிவாசன் பேசுகையில், உலகில் 30 க்கும் அதிகமான நாகரிகங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் எகிப்து, சுமேரிய, கிரேக்க, ரோமாபுரி உள்ளிட்ட நாகரிகங்கள் அழிந்துவிட்டன. அவர்களிடம் வாழ்க்கையைப் பகுத்தாய்ந்து, எந்த அடிப்படையில் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்ற சித்தாந்தம் இல்லாததால், அந்நாகரிகங்கள் அழிந்துவிட்டதற்குக் காரணம். அந்த மக்கள் போரில் வெற்றி பெற்று, செல்வத்தைக் குவித்து, இன்பத்தைத் துய்த்தாலும், அதை எப்படி நீடித்து நிலை நிறுத்திக் கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை.

ஆனால், போரில் வெற்றி பெற்று நீடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரகசியத்தைத் தெரிந்து கொண்ட ஒரே நாகரிகம் நம் நாடு மட்டுமே. அது, தமிழனுக்கு அதிகமாகவே தெரிந்திருக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கையை நான்காகப் பிரித்துக் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இந்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பகுப்பாய்வு முறை இந்த நாட்டினுடைய அனைத்து மொழிகளிலும் உள்ளது. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பான் உள்பட வேறெந்த மொழிகளிலும் இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சியிலும் கட்சித்தாவல் தடை சட்டம் வரும் - பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன்

சட்டம் நமக்கு உரிமையைக் கொடுக்கிறது. ஆனால், அறம் நமக்குக் கடமையை வலியுறுத்துகிறது. காலம் மாறினாலும், பண்பாட்டை மாற்றாமல் இருப்பதால்தான் தமிழர்கள் நிலைத்து நிற்கின்றனர். ஒவ்வொருவரின் கடமைதான் இன்னொருவரின் உரிமை. இதை அதிகமாக உணர்ந்து கொண்டது தமிழ்ச் சமூகம்.

அறத்தால் வருவதே இன்பம் என்கிறார் வள்ளுவர். வள்ளுவன் சொன்னதே, இந்த நாட்டினுடைய வடமொழி உள்பட அனைத்து இலக்கியங்களும் தமிழிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காகவும், நல் கருத்துகளைக் கூறுவதற்காகவும் இந்தியா முழுவதும் தேடியிருக்கிறான் வள்ளுவன். அப்படித் தேடி, தேடி எங்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறதோ, அதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான் வள்ளுவன். எனவே, நாம்தான் உலகத்துக்குக் கொடுத்திருக்கிறோம் என்பதால், அது தமிழுக்குப் பெருமை.

உணவைப் பகுத்துண்டு வாழும் அறம் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை. அது இந்த நாட்டின் அறம். இப்படிப்பட்ட சிந்தனையாக்கம் உருவாக வேண்டும். பெற்றோர், பெரியோர், ஆசிரியர்கள், பெண்கள் ஆகியோரை மாணவர்கள் போற்றி மதிக்க வேண்டும். இதேபோல, நம் நாட்டையும் போற்ற வேண்டும். இவற்றை ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டும் என்றார் .  இறுதியில் உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் இ.ஆர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சியிலும் கட்சித்தாவல் தடை சட்டம் வரும் - பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன்

இதனை தொடர்ந்து இராம. சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், எப்படி வெற்றி பெற்றது என்பது தெரியும். திமுக தவிர பிற கட்சிகள் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற உறுப்பினர்களையும் திமுகவினராக மாற்ற முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் பிற கட்சிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடைச் சட்டம் உள்ளது. அதேபோல, உள்ளாட்சி தேர்தல்களிலும் ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிற கட்சிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரும்போது உள்ளாட்சியிலும் கட்சி தாவல் தடை சட்டம் வரும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழகச் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரலாம். வர வேண்டும் என பாஜக விரும்புகிறது என்றார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், மாவட்டத் தலைவர்கள் ஆர். இளங்கோ (தெற்கு), என். சதீஷ்குமார் (வடக்கு), மேலிட பார்வையாளர்கள் சுப. அண்ணாமலை, பேட்டை சிவா, பொதுச் செயலர் பி. ஜெய்சதீஷ், பொருளாளர் வி. விநாயகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget