மேலும் அறிய

Book Fair Festival: விழுப்புரத்தில் விரைவில் 3வது புத்தகத் திருவிழா - எத்தனை அரங்குகள்? - முழு விவரம் இதோ

விழுப்புரத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா மார்ச் 02ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Book Fair Festival:  விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌ மற்றும்‌ பதிப்பாளர்கள்‌ சங்கம்‌ இணைந்து நடத்தும்‌, மூன்றாவது புத்தகத்திருவிழா 02.03.2025 முதல்‌ 12.03.2025 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ‌ ஷேக் அப்துல் ரகுமான்  அறிவித்துள்ளார்.

மார்ச் 02-ஆம்‌ தேதி முதல்‌ மார்ச் 12-ஆம்‌ தேதி வரை

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌ மற்றும்‌ பதிப்பாளர்கள்‌ சங்கம்‌ (BAPASI) ஆகியவை இணைந்து நடத்தும்‌, மூன்றாவது புத்தகத்திருவிழா விழுப்புரம்‌ புதிய பேருந்து நிலையம்‌ அருகிலுள்ள நகராட்சித்‌ திடலில்‌ வருகிற மார்ச் 02-ஆம்‌ தேதி முதல்‌ மார்ச் 12-ஆம்‌ தேதி வரையில்‌ 11 நாட்கள்‌  தினமும்‌ காலை 10.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில்‌ 100 புத்தக அரங்குகள்‌ அமைக்கப்பட உள்ளது.

அரங்கில்‌ கலை, இலக்கியம்‌, இலக்கணம்‌, வரலாறு, புதினம்‌. கவிதை. பண்பாடு, அறிவியல்‌, ஆன்மிகம்‌, போட்டி தேர்விற்கான புத்தகங்கள்‌, சரித்திர மற்றும்‌ சமூக நாவல்கள்‌ என அனைத்து விதமான புத்தகங்களும்‌ குழந்தைகள்‌ முதல்‌ பெரியவர்கள்‌ வரை பயன்பெறும்‌ வகையில்‌ அனைவருக்கும்‌ ஏற்ற வகையில்‌ புத்தகங்கள்‌ இடம்‌ பெறவுள்ளன. புத்தக கண்காட்சி நடைபெறும்‌ நாட்களில்‌, தினந்தோறும்‌. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன்‌ போட்டிகள்‌, கலைநிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ பட்டிமன்றங்களும்‌, மாலை நேரத்தில்‌ பல்வேறு எழுத்தாளர்கள்‌, சிறப்பு பேச்சாளர்கள்‌ பங்கேற்கும்‌ பட்டிமன்றம்‌ மற்றும்‌ சொற்பொழிவு நிகழ்ச்சிகளும்‌ மற்றும்‌ முக்கிய பிரமுகர்களின்‌ கலைநிகழ்ச்சிகளும்‌ நடைபெறவுள்ளது.

இது தவிர வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில்‌ குறைந்த விலை மரக்கன்றுகள்‌ விற்பனை செய்தல்‌, குழந்தைகள்‌ மகிழும்‌ வகையில்‌ பொழுதுபோக்கு அம்சங்களும்‌ விளையாட்டு நிகழ்ச்சிகளும்‌ இடம்பெறவுள்ளது. எனவே, பொதுமக்கள்‌, மாணவ மாணவிகள்‌, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்‌ இளைஞர்கள்‌, தங்களது அறிவுசார்ந்த தேடலுக்கான களமாகவும்‌, பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக்கொடுத்து நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கும்‌ இடமாகவும்‌, நண்பர்கள்‌ பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையை ஏற்படுத்திக்கொள்ளும்‌ விதமாகவும்‌. இந்த புத்தக திருவிழாவை நல்ல முறையில்‌ பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு பதிவு செய்த தமிழ் சங்க நிர்வாகிகள், அரசு விருது பெற்ற இலக்கிய பேச்சாளர்களுக்கு முன்னுரிமை

புத்தகத் திருவிழாவில் நூல்களை வெளியிட உள்ள உள்ளுர் எழுத்தாளர்கள் மற்றும் அரசு பதிவு செய்த தமிழ் சங்க நிர்வாகிகள், அரசு விருது பெற்ற இலக்கிய பேச்சாளர்களுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதால், விழாவில் பேச விருப்பமுள்ள சான்றோர்கள் 25.02.2025 ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட மைய நூலகரை 9894456709 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதி முடிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெற தங்களது பங்களிப்பினை கீழ்கண்ட வங்கி கணக்கில் நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Account Details

Bank Account Name :  Villupuram Book Fair 2023-2024

Bank Account  Number : 7442959394

IFSC Code : IDIB000V024

MICR Code : 605019019

Bank Name : Indian Bank Villupuram

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
Ops: அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
Ops: அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
Bihar Election: பீகார் வரலாறு, அஞ்சும் பாஜக கூட்டணி..! ஓட்டு ஏறினால், முதலமைச்சர் மாறுவது கன்ஃபார்ம்..
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
Affordable Cars: Maruti Swift முதல் Tata Punch வரை.. ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் தரமான 10 கார்கள் இதுதான்!
Affordable Cars: Maruti Swift முதல் Tata Punch வரை.. ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் தரமான 10 கார்கள் இதுதான்!
Top 10 News Headlines: இ-ஸ்கூட்டருக்கு மானியம், சென்னை மக்களுக்கு ஆஃபர், டிஎன்ஏ சோதனை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இ-ஸ்கூட்டருக்கு மானியம், சென்னை மக்களுக்கு ஆஃபர், டிஎன்ஏ சோதனை - 11 மணி வரை இன்று
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Scholarship: மாதம் 25ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு ஜாக்பாட்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாதம் 25ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு ஜாக்பாட்- விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget