sivagangai | சிவகங்கையில் இணைந்த மாவட்ட செயலாளர்கள்: ம.தி.மு.க.,வில் ஏற்பட்ட மல்லுக்கட்டு !
”உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.” - மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் பேட்டி.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக சிவகங்கையில் ம.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட செய்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது மற்றொரு தரப்பு மதிமுகவினர், ’செய்தியினை எடுத்து வெளியிடக்கூடாது’ என தெரிவித்து செய்தியாளர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
#Abpnadu மதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேற்றப்பட வேண்டும்’ என்று முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் எற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், சமாதனம் செய்ய வட்டாட்சியர் வந்தார்.@reportervignesh | @kathiravan_vk | @am_kathir pic.twitter.com/IfTZITcRKT
— Arunchinna (@iamarunchinna) March 21, 2022
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் செவந்தியப்பன் தலைமையில் திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், உயர்மட்ட குழு உறுப்பினர் அழகுசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஆலோசனையில் ஈடுப்பட்டது கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
#Abpnadu | ம.தி.மு.க., அரசியல் கட்சியினர் தற்போது தி.மு.க.,வின் கூட்டணி கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ம.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.@mdmkiw pic.twitter.com/Kyy3Nmbluz
— Arunchinna (@iamarunchinna) March 21, 2022
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செவந்தியப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது..,” ஈழத்தை வென்றெடுப்பதன் அடிப்படையில் மதிமுகவில் பல்வேறு இளையதலைமுறையினர் ஒன்றிணைந்தோம். ஆனால் தற்போது வைகோ ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். 28 ஆண்டுகளுக்கு மேல் கட்சிக்காக உழைத்துள்ளோம், ஆனால் திறை மறைவில் இருந்த அவரது மகனை பதவிக்கு கொண்டு வரவே விரும்பியுள்ளார். வாரிசு அரசியல் குறித்து ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவே குரல் கொடுத்தவர் வைகோ. ஆனால் இன்று தன் மகனை கட்சியில் அமர வைத்துள்ளார். ஸ்டாலின் கூட 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் உழைத்து முன்னேறி வந்தவர். அதே போல் மிசா உள்ளிட்ட பல்வேறுவற்றை சந்தித்தவர். வைகோவின் மகன் கட்சிக்காக என்ன செய்தார்?. பல வருடங்களாக மதிமுகவில் பணி செய்து ஏமாந்து நிற்கிறோம். இதைப்போல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகள் சொல்லிவிடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மதிமுகவை திமுக உடன் இணைக்க உள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. இது போன்ற தகவல் என்னை போன்று கடுமையாக உழைத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஏப்ரல் 1 முதல், ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு..