மேலும் அறிய
Advertisement
ஏப்ரல் 1 முதல், ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு..
சிறப்பு ரயில் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது, அதன் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 7, 16, 21, 28 மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30 ஜூலை 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல் 5, 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஜூலை 5, 12, 19, 26 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது.
அதேபோல் பயணிகளின் வசதிக்காக மதுரை - செங்கோட்டை மற்றும் மானாமதுரை - திருச்சி பிரிவுகளில் கூடுதலாக ரயில் சேவை ஏப்ரல் 1 முதல் துவக்கப்பட இருக்கிறது. அதன்படி செங்கோட்டை - மதுரை விரைவு சிறப்பு ரயில் (06662) செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில்மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் (06665) மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இந்த ரயில்கள் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோயில் சந்தை, சங்கரன்கோயில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 13 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பொது பெட்டிகள் மற்றும் 2 காப்பாளர் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். திருச்சி - மானாமதுரை விரைவு சிறப்பு ரயில் (06829) திருச்சியிலிருந்து காலை 09.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மானாமதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மானாமதுரை - திருச்சி விரைவு சிறப்பு ரயில் (06830) மானாமதுரையில் இருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு திருச்சி சென்று சேரும்.
இந்த ரயில்கள் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 8 "டெமு" (DEMU - Diesel Electrical Multiple Units) பெட்டிகள் இணைக்கப்படும்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட் - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion