மேலும் அறிய

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது - இபிஎஸ் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த  11ம் தேதி பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஒரே நாளில் சீர்காழி தாலுகாவில் 44 சென்டிமீட்டர் மழையும், மாவட்டம் முழுவதும் சராசரியாக 25 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள 68,000 ஹெக்டர் நிலப்பரப்பில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நீரால் சூழப்பட்டது. மேலும் 2756 வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதம் அடைந்தன. இந்த மழையால் மாவட்டத்தில் 287 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது -  இபிஎஸ் அதிரடி

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் விளைநிலங்களில் சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் தரங்கம்பாடி தாலுகாவில் தலைச்சங்காடு ஊராட்சியில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் மழை நீரால் மூழ்கி அழுகிய பயிர்களை எடுத்துக் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் அதே பகுதியில் தனியார் திருமண கூடம் ஒன்றில் தலைச்சங்காடு ஊராட்சியை சேர்ந்த 1308 குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, போர்வை, புடவை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார். 

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது -  இபிஎஸ் அதிரடி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. போதைப்பொருள் தங்கு தடை இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கிடைப்பதால், இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். அதிமுக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க என்பது தேசிய கட்சி ஒவ்வொரு முறையும் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வரும் பொழுது  சந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதிமுக - பாஜக என்பது இரு வேறு கட்சி. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அமமுகவுக்கு ஒருபோதும் இடம் கிடையாது. தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மழை வெள்ள பாதிப்புகளை பார்க்கச் சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்துள்ளனர். உண்மையில் மு.க.ஸ்டாலின்தான் மகிழ்ச்சியாக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது -  இபிஎஸ் அதிரடி

சீர்காழி தாலுகாவில் திருவெண்காடு பகுதிக்கு வந்த முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல்  என்னிடம் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும். கடந்த 2021 ஜனவரி 16 -ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் பழனிசாமி வழங்குவாரா? என்று அறிக்கை வெளியிட்டார். அதனை சுட்டிக்காட்டி அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி எழுப்பிய ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவாரா?.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது -  இபிஎஸ் அதிரடி

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் பூவாளி குப்பத்தில் தமிழக அரசு முடக்கியதால் தற்போது பெய்த கனமழையில் 2000 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மழைக்குள்ளாவது அந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதே போல் பெருமாள் ஏரி தூர்வாரும் திட்டத்தையும் அரசு முடக்கி வைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி சீர்காழி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்கா மக்களுக்கும் சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். 10 நாட்களாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி; அமமுக கிடையாது -  இபிஎஸ் அதிரடி

அதனால் இந்த தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். திருவாலி ஏரி உட்பட கடைமடை பகுதியில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளை கொண்டு முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும் என்றார். இதில் முன்னாள் அமைச்சர் ஓ‌.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget