”பிப்ரவரி 26ல் த.வெ.க. செயற்குழு, பொதுக்குழு” வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு..!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகவிருக்கிறது. சென்னை அருகே ECR உள்ள ஒரு தனியார் இடத்தில் இந்த பொதுக்குழுவை பிரம்மாண்டமாக நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 70ஆயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக பொதுக்குழு, செயற்குழுவை நடத்தவும் அதற்கு அடுத்து விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அறிவிப்பை வெளியிடவும் தமிழக வெற்றிக் கழக வியூக வகுப்பு குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
#BREAKING | இந்த மாத இறுதியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக செயற்குழு / பொதுக்குழுவை கூட்ட திட்டம்https://t.co/wupaoCzH82 | #TVK #TVKVijay #Tamilnadu #TamilNews @tvkvijayhq pic.twitter.com/S8m69zn7YB
— ABP Nadu (@abpnadu) February 13, 2025
அதே நேரத்தில் விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, அடுத்தக் கட்டமாக பொதுக்கூட்டங்கள், மாநாடு என்று அறிவிப்புகள் வெளியாகவுள்ளதால் வெற்றிக் கழக நிர்வாகிகள் சுறுசுறுப்பில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

