உயிர் நண்பனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ரவுடி - நடந்தது என்ன?
கரூர் தொழில் பேட்டை அருகே உள்ள குழந்தை இயேசு பள்ளியில் அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

கரூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பசுபதிபளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் தொழிற்பேட்டையில் இரவு பெயின்டான் சுரேஷ் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரகாசின் உயிர் நண்பனான சந்தோஷ் குமார், மற்றொரு சந்தோஷ் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது சந்தோஷ் குமாருக்கும் பிரகாசுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மது போதையில் இருந்ததால் பீர் பாட்டலால் பிரகாசை சந்தோஷ் குமார் தாக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
சந்தோஷ் குமார் தாக்கியதில் பிரகாசுக்கு மண்டை உடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் அவர் வீடு திரும்பிய நிலையில் கரூர் தொழில் பேட்டை அருகே உள்ள குழந்தை இயேசு பள்ளியில் அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் பசுபதி பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடல் குழு ஆய்வுக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவல் தெரிவித்ததன் பேரில் சந்தோஷ்குமார் உறவினர்கள் காந்திகிராம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவியத் தொடங்கினர்.
இந்த நிலையில் சந்தோஷ் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணத்தை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே மது போதையில் உயிர் நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

