Dragon OTT Release: தியேட்டரில் மாஸ் காட்டிய டிராகன்... அடுத்து ஓடிடியில் சம்பவம் செய்ய வருகிறது.. எந்த தேதியில் தெரியுமா?
Dragon OTT Release Date Platform: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன், பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுது. முதல் நாள் வசூல் ரூ. 6 கோடியுடன், தனது பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொடங்கியது.
#Dragon crosses 100crs pic.twitter.com/RVvQetBy2u
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 2, 2025
இந்த படம் உலகளவில் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. டிராகன் திரைக்கு வந்து 25 நாட்கள் கடந்த நிலையில் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரூ.37 கோடியில் எடுக்கப்பட்ட டிராகன் தற்போது வரை ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி 2025 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து ரூ.150 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற மகத்தான சாதனையை டிராகன் படைத்துள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி படம் இப்போது வரையில் ரூ.138 கோடி வரையில் தான் வசூல் குவித்திருக்கிறது.
டிராகன் OTT வெளியீட்டு தேதி:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. வருகிற மார்ச் 21 அன்று நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் தெரிவித்துள்ளது. டிராகன் படம் தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Some dragons don’t breathe fire, because their comebacks are hotter 😎🧯
— Netflix India South (@Netflix_INSouth) March 18, 2025
Watch Dragon on Netflix, out 21 March in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #DragonOnNetflix pic.twitter.com/hFGn9tRTia
டிராகனின் சுவாரஸ்யமான கதைக்களம், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு மற்றும் அபாரமான பாக்ஸ் ஆபிஸ் வசூலால் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
ரசிகர்கள் டிராகன் எப்போது ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஓடிடி தளத்திலும் இந்த படம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

