Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
"விஜய்க்கு வேலை பார்க்க வந்துவிட்டு தன்னையே விஜய் என ஆதவ் அர்ஜூனா நினைத்துக்கொண்டிருப்பதாகவும், அவரது நிறுவன ஊழியர்களே அவரை விட்டுச் செல்ல தயாராகிவிட்டதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த உடனே நம்பர் 2ஆக மாற நினைத்த லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவை அப்டியே அலேக்காக தூக்கி வெளியில் போட்டது அந்த கட்சி. ஆதவ் அர்ஜூனாவின் நோக்கமும் எண்ணமும் என்ன என்பதை அந்த கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சரியாக புரிந்துக்கொண்டதால் அது சாத்தியமானது. அந்த கட்சித் தலைவரும் நிர்வாகிகள் கொடுத்த ஆதாரங்களையும் நடவடிக்கைகளையும் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத ஆதவ் அர்ஜூனா, தானே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். சமூக வலைதள பக்கங்களில் புலம்பித் தள்ளினார்.
டார்கெட் விஜய் – ஜானுக்கு குறி
பின்னர், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பிரசாந்த் கிஷோர் மூலம் தீவிரமாக காய்நகர்த்தினார். ஆனால், ஆதவ் அர்ஜூனாவை பற்றி நன்கு தெரிந்த விஜயின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், அந்த கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனா வருகைக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரை ஜான் ஆரோக்கியசாமியுடன் நெருங்கி பழக வைத்து, அவர் நம்பிக்கையை பெற்று, ஜான் தொலைபேசியில் அந்த நிர்வாகியிடம் பேசியதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்ற குற்றஞ்சாட்டு இன்றும் நிலவுகிறது.
பீகாருக்கு நிதி உதவி – தமிழ்நாட்டிற்கு கைம்மாறு
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பீகாரில் கட்சித் தொடங்கி நடத்தி வரும் நிலையில், அந்த கட்சிக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்வதாக தானே சென்று சரண்டர் ஆனார் ஆதவ். அதற்கு கைம்மாறாக அவர் கேட்டது, விஜய் கட்சியில் சேர்த்துவிட்டு ஒரு நல்ல போஸ்டிங் வாங்கிக் கொடுங்க என்பதுதான். PK அதையும் செய்தார். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தன் கட்சிக்கு Fund செய்யும் ஆதவ் அர்ஜுனாவிற்கு இதைக் கூட PK செய்வில்லையென்றால் எப்படி. செய்தார். பிரசாந்த் கிஷோரின் கைங்கரியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தலைமையிலேயே இணைந்தார் ஆதவ் அர்ஜூனா.
இணைந்தவுடன் பதவி – ஜானுக்கு மீண்டும் மீண்டும் குறி
கட்சியில் இணைந்தவுடனே தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்று பெரிய பதவியை ஆதவ் அர்ஜூனாவிற்கு தூக்கிக் கொடுத்தார் விஜய். தன் திட்டமெல்லாம் பலிக்கத் தொடங்கிவிட்டது என்று குஷியில் இருந்தார் ஆதவ். பின்னர் பிரசாந்த் கிஷோரை சென்னைக்கே அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்தார். தான் பெரிய ஆள், தான் கூப்பிட்டால் வேலையெல்லாம் விட்டுவிட்டு எனக்காக எங்கு வேண்டுமெனாலும் PK வருவார் என்பதை நிறுவ முற்பட்ட ஆதவிற்கு அதுவே அடியாக மாறிப் போகத் தொடங்கியிருக்கிறது.
’PK போட்டோ போடாத’ ஆர்டர் போட்டாரா ஆதவ்..?
பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பிற்கு பின்னர் ஆதவ் பெயர் அந்த பெரிய தலைகள் பெயருக்கு பின்னால் மறையத் தொடங்கியது. த.வெ.க 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் PK பேசிய பிறகு சென்னை கிண்டியில் அலுவலகம் போட்டிருக்கும் PK அணியினர் விஜய் – பிரசாந்த் கிஷோர் இருவரது முகங்களை மட்டும் வைத்து தமிழ்நாட்டில் ப்ரோமோஷன் வேலையை பார்க்கத் தொடங்கினர். கொதித்தெழுந்தார் ஆதவ். தன் முகத்தை விட்டுவிட்டு PK முகமா ? என கடுகடுத்துப் போனார். PK அணியில் இதையெல்லாம் செய்யும் ‘அ’ எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்ணை அழைத்து சத்தம் போட்டிருக்கிறார் என்கிறார்கள் PK அணியினர்.
அதோடு, பீகாரில் வேண்டுமென்றால் உங்கள் இஷ்டத்திற்கு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் PK டீமாக இருந்தாலுமே நான் சொன்னதைதான் கேட்க வேண்டும் என்று கட்டளையிடும் தொனியில் பேசியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ‘அ’ எழுத்தில் தொடங்கும் பெண்மணி PK விடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலியாகும் கூடாரம் - VOC-யை விட்டுக் கிளம்பத் தயாராகும் ஊழியர்கள் -
அதே நேரத்தில், ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகளும் அவர் தங்களை நடத்தும் விதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத அவரது வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத்தின் முக்கியமான ஊழியர்கள் ராஜினமா செய்யும் முடிவில் இருப்பதாகவும், அவர்கள் திமுக அல்லது அதிமுகவிற்கே சென்று பணியாற்றலாம் என்ற எண்ணத்தில் பணிவாய்ப்பு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து விசாரித்தப்போது, ஏற்கனவே ஒருவர் வெளியேறி வேறு நிறுவனத்திற்கு சென்று விட்ட நிலையில், ’S' - ல் தொடங்கும் மூன்றெழுத்து பெயர் கொண்ட நபர் உள்ளிட்ட அடுத்த முக்கிய 3 பேர் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் VOC-யை விட்டு வெளியேறுவர் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் – அப் குருப்பை விட்டு வெளியேறிய PK
இதுமட்டுமின்றி, Internal ஆக வியூக வகுப்பு தொடர்பாக பேசிக் கொள்ள ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த் கிஷோர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நபர்களை இணைத்து ஒரு வாட்ஸ்-அப் குழு செயல்பட்டு வந்ததாகவும் அதில் பிரசாந்த் கிஷோர் கேட்ட ஒரு கேள்விக்கு, விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி நக்கலாக பதில் சொல்ல, அதில் கடுப்பான பிரசாந்த் கிஷோர் அந்த குழுவை விட்டே வெளியேறிவிட்டதாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத போது இது எல்லாம் தேவையா ? விஜய்க்கு பணியாற்ற வந்துவிட்டு தன்னையே விஜயாக நினைத்துக்கொண்டால் எப்படி என்று புலம்பித் தீர்க்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான நண்பா, நண்பிகள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

