Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Montha Cyclone Update: 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை; 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- பள்ளி, கல்லூரி விடுமுறை?

மோன்தா புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்
திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல தேனி, தென்காசி, நெல்லை, சிவகாசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பின்னணி என்ன?
வங்கக் கடலில் மோன்தா புயல் உருவாகி உள்ளது. சென்னைக்குக் கிழக்கே 640 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா- மசிலிப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றில் இருந்து 3 நாட்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.28) விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






















