மேலும் அறிய

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்திய நகர மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தரமற்று நடைபெறுவதாக கூறு நகர மன்ற உறுப்பினர்கள் பணியினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தரமற்று நடைபெறுவதாக கூறு நகர மன்ற உறுப்பினர்கள் பணியினை தடுத்து நிறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலைய சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது.

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்திய நகர மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. இந்நிலையில் உணவக கட்டிடம், மிதிவண்டி நிறுத்தம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Ducati Streetfighter V4: தாறுமாறான அப்டேட்களை கொண்ட டுகாட்டி ஸ்ட்ரீட் ஃபைட்டர் - தலை சுற்ற வைக்கும் விலை, எவ்வளவு?

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்திய நகர மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களாக சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல் கட்டமாக ஒரு பகுதி தரை தளம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தரமற்றதாக இருப்பதாக கூறி சீர்காழி நகர மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், பாலமுருகன், மற்றும் இவரது ஆதரவாளர்கள்  பேருந்து நிலையம் சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து நிலையம் சீரமைப்பு குறித்த திட்ட மதிப்பீட்டை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரியும், வேலைகளை தருமாக செய்யக்கோரியும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிகளை தடுத்து நிறுத்திய நகர்மன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Maha Shivaratri 2024: 25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவலிங்கம் - பரவசத்தில் பக்தர்கள்

சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்திய நகர மன்ற உறுப்பினர்கள் - காரணம் என்ன?

மேலும், பணிகளை தரமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த செயலால் சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்காழி நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மன்ற தலைவர் இந்த இரண்டு தரப்பினரும், நகர மன்ற உறுப்பினர்களை எவ்வித ஆலோசனைகளும் இன்றி தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவதாக கூறு இதுபோன்று பல்வேறு பிரச்சனைகள் சீர்காழியில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவபக்தருக்காக விலகி நின்ற திருப்புன்கூர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget