மேலும் அறிய

சிவபக்தருக்காக விலகி நின்ற திருப்புன்கூர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர்  சௌந்தரநாயகி உடனாகிய சிவலோகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற மாசி மாத  பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் சௌந்தரநாயகி உடனாகிய சிவலோகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற மாசி மாத பிரதோஷ வழிபாடில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக விற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த தீவிர சிவபக்தரான நந்தனார் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புன்கூர் தளத்திற்கு வந்தடைந்தார்.

Maha Shivratri: " மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” - துணை ஜனாதிபதி நெகிழ்ச்சி..


சிவபக்தருக்காக விலகி நின்ற திருப்புன்கூர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

அப்பொழுது அவர் சிவபெருமானை தரிசிக்க சென்றபோது அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோயிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார். ஆனால், கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டி நந்தனார் காத்திருந்தபோது, தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணித்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகி இருந்தார். 

Maha Shivaratri: களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்!


சிவபக்தருக்காக விலகி நின்ற திருப்புன்கூர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

அப்போது வாசலில் இருந்தே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டி வேண்டியதாக கோயில் வரலாறு தெரிவிக்கின்றது. இன்றளவும் இக்கோயிலின் ராஜ கோபுரத்திற்கு வெளியே நின்றே மூலவரை தரிசிக்கும் வகையில் நந்தி பகவான் விலகியே இருப்பார். இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் மாசி மாத பிரதோஷம்  மற்றும் சிவராத்திரி வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி, தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடந்த சிவராத்திரி பூஜை! பக்தியில் திளைத்த பக்தர்கள்!


சிவபக்தருக்காக விலகி நின்ற திருப்புன்கூர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

அதனை தொடர்ந்து புதிய அங்க வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல், வில்வ இலை மற்றும் பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் நந்தி பகவானுக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவலோகநாத சுவாமியையும் பக்தி பரவசம் பொங்க வழிபாடு செய்தனர்.

Maha Shivaratri: களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget