மேலும் அறிய

மீனவர்கள் கவனத்திற்கு! மார்ச் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் காப்பீடு கிடையாது - நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

பிரதான் மந்திரி மத்சய சம்பட யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் விபத்துக் காப்பீடு பெற, மீனவர்கள் 31.03.2026-க்குள் NFDP வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என நாகை ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் மத்திய அரசின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதற்கு, தேசிய மீன்வள டிஜிட்டல் (NFDP) வலைதளத்தில் தங்களது விவரங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், அறிவுத்தியுள்ளார்.

பிரதான் மந்திரி மத்சய சம்பட யோஜனா (PMMSY) திட்டத்தின் முக்கியத்துவம்

மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி மத்சய சம்பட யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கான 'குழு விபத்துக் காப்புறுதித் திட்டம்' (Group Accident Insurance Scheme) கடந்த 18.10.2021 முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எதிர்பாராத விதமாக விபத்துகளைச் சந்திக்கும்போது, அவர்களின் குடும்பத்திற்குப் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

காப்பீட்டுத் தொகையின் விவரங்கள்

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மீனவர்களுக்குப் பின்வரும் நிதியுதவிகள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகின்றன:

* மரணம் / முழுமையான ஊனம்: மீனவர் அல்லது மீனவ மகளிர் விபத்தில் மரணமடைந்தாலோ, நிரந்தரமான முழு ஊனம் அடைந்தாலோ அல்லது கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போனாலோ அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5.00 இலட்சம் வழங்கப்படும்.

* பகுதி ஊனம்: விபத்தினால் உடல் உறுப்புகளை இழந்து பகுதி ஊனம் ஏற்படும் நேர்வுகளில் ரூ. 2.50 இலட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

*மருத்துவச் செலவுகள்: விபத்தினால் ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவச் செலவினங்களுக்காக ரூ. 25,000/- வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பதிவு ஏன் அவசியம்?

இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மீனவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களில், தேசிய மீன்வள டிஜிட்டல் (NFDP - National Fisheries Digital Platform) வலைதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ள மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் மட்டுமே இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலன் பெற இயலும்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர் மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் இந்த டிஜிட்டல் தளத்தில் இணைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கெடு விதிப்பு: மார்ச் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், "மீனவர்கள் தங்களது விவரங்களை வரும் 31.03.2026-க்குள் தேசிய மீன்வள டிஜிட்டல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத மீனவர்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், அடுத்த நிதியாண்டான 2026-2027 ஆம் ஆண்டிற்குரிய விபத்து குழு காப்புறுதித் திட்டத்தின் கீழ் எவ்விதப் பலன்களையும் பெற முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யும் முறை

மீனவர்கள் இந்தப் பதிவினை மேற்கொள்வதற்கு எளிமையான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

* மீனவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களை அணுகலாம்.

* பதிவு செய்யச் செல்லும்போது தங்களது ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

* கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் சான்றிதழ் அல்லது அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்சியரின் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோரப் பகுதி மற்றும் உள்நாட்டு மீன்வளத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "ஆபத்தான சூழலில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு இந்தக் காப்பீடு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகும். எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், காப்பீடு ரத்தாவதைத் தடுக்கவும் மீனவர்கள் உடனடியாகப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்" என ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக விவரங்களுக்கு மீனவர்கள் அந்தந்தப் பகுதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
காசிக்கு இணையான திருவெண்காடு சந்திர தீர்த்தத்தில் தெப்பத்தில் மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி - அம்பாள்!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு நடவடிக்கை: மயிலாடுதுறை அருகே துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்பு...!
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget