மேலும் அறிய

CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?

முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.

முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையுடன், கூடுதலாக 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே, 1,200 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த உதவித் தொகையை பெறும் அனைவரது  வங்கிக் கணக்கிலும், 3,200 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சிறப்பு நிதி ரூ.2000 கூடுதலாக வழங்கிய முதலமைச்சர்

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! என குறிப்பிட்டு,

“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,

பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!“ என தனது பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
BSNL அதிரடி அறிவிப்பு: வெறும் ₹150-க்கு 70GB டேட்டா! 4 நாட்கள் மட்டுமே - மிஸ் பண்ணிடாதீங்க!
BSNL அதிரடி அறிவிப்பு: வெறும் ₹150-க்கு 70GB டேட்டா! 4 நாட்கள் மட்டுமே - மிஸ் பண்ணிடாதீங்க!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Top 5 Powerful Scooters: இந்தியாவின் சக்திவாய்ந்த பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
இந்தியாவின் சக்திவாய்ந்த பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
Embed widget