மேலும் அறிய

China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?

US Iran War: மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக சீனா என்ட்ரி கொடுத்துள்ளது. அடுத்து என்ன.?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானை தாக்கி வரும் நிலையில், ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பெரிய ட்விஸ்ட்டாக வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இந்த போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சீனா இந்த விவகாரத்திற்குள் வந்துள்ளது. அதோடு, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் ஒரு மெசேஜை சொல்லி இருக்கிறது சீனா. அது என்ன.? பார்க்கலாம்.

“ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம்“

மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போரில், ஈரானுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா மற்றும் ஈரான் இடையேயான பாரம்பரிய நட்புறவை சீனா பெரிதும் மதிப்பதாக தெரிவித்துள்ளர்.

மேலும், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாப்பதில், ஈரானிற்கு சீனா ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில் சீனா உறுதுணையாக இருக்கும் என்றும் வாங் யி கூறியுள்ளார்.

“அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்“

தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தியுள்ளார். மேலும், பதற்றங்கள் இன்னும் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்த போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, ஈரானுக்கு சீனா ஏவுகணைகளை வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை வாங் யி மறுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில்,  ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இந்த சூழலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்குவோம் என சூளுரைத்தது.

அதைத் தொடர்ந்து, தனது தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் கடுமையாக தாக்கத் தொடங்கியது. இதையடுத்து, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளும் பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போரில் அவர்களும் இணையும் பட்சத்தில், இது மிகப் பெரிய ஒரு போராக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே சீனா ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒருவேளை அவர்களும் ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவ ஆரம்பித்தால், நிச்சயம் இது ஒரு பிராந்திய போராக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வரும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
Embed widget