ஆந்திரா போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் - போராட்டத்தில் குதித்த மாற்றுத்திறனாளிகள்...! அது என்ன கோரிக்கை..?
ஆந்திர மாநிலம் வழங்குவது போல மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருவேறு இடங்களில் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
என்னால சமாளிக்க முடியல...போதையில் ரகளை செய்தது குறித்து விநாயகன் விளக்கம்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். ஆந்திராவில் வழங்குவது போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 6000 ரூபாய் மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 10,000 ரூபாய் படுக்கையில் வாழ்ந்து வரும் நபர்களுக்கு 15,000 ரூபாய் என தங்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம்
அதேபோன்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50 சதவீதம் 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர்ந்து 8 மணி நேரம் பணிதளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.. எதற்காக தெரியுமா?
சீர்காழியில் போராட்டம்
இதேபோன்று சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் அதே கோரிக்கைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
போக்குவரத்து பாதிப்பு
2000 உதவித் தொகைக்கு விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவி தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சீர்காழி- மயிலாடுதுறை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்காத மாற்றுத்திறனாளிகள் தங்களை போராட்டம் சிறை நிரப்பும் போராட்டம் ஆகையால் எங்களை கைது செய்யுங்கள் என கூறி காவல்துறையினரின் வாகனங்களை ஏறி தானாக கைதாகினர். கைதாகிய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

