என்னால சமாளிக்க முடியல...போதையில் ரகளை செய்தது குறித்து விநாயகன் விளக்கம்
குடிபோதையில் நடிகர் விநாயகன் பக்கத்து விட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது நடிகர் விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார்

விநாயகன்
மலையாளத்தில் கம்மட்டிப்பாடம் , படா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன். தமிழில் விஷால் நடித்த திமிரு , கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் , ரஜினி நடித்த ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளர். தனது நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமானதாக காட்டும் விநாயகன் சினிவாவிற்கு வெளியே குடிபழக்கம் கொண்ட , பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொள்ளும் ஒரு நபராகவே மக்கள் மனதில் பதிந்துள்ளார்.
வேட்டியை அவிழ்த்து காட்டிய விநாயகன்
விமான நிலைய அதிகாரிகளிடம் குடி போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக விநாயகன் கடந்த ஆண்டு ஹைதராபாத் போலீஸால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து தற்போது விநாயகன் தனது பக்கத்து விட்டினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
#Vinayakan 🥃🔞🙉
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 20, 2025
Actor or Drunker 😡
He should be banned from acting.
pic.twitter.com/JK3UWJTzop
கொச்சியில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கணியில் நின்றுகொண்டு இன்னொரு வீட்டில் இருப்பவர்களுடன் விநாயகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தனது வேட்டியை சரியாக கட்ட முயற்சிக்கு, அவர் தடுமாறி தரையில் விழுகிறார். மேலும் வாக்குவாதம் வலுக்க விநாயகன் தனது வேட்டியை அவிழ்த்து காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியது. இந்த வீடியோவைத் தொடர்ந்து விநாயகனுக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. விநாயகனின் தகாத செயலுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என பலர் தெரிவித்தார்கள்
மன்னிப்பு கேட்ட விநாயகன்
விநாயகனின் வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து விநாயகன் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். "ஒரு நடிகனாகவும் , ஒரு தனி மனிதனாகவும் என்னால் நிறைய விஷயங்களை சமாளிக்க முடியவில்லை. என் சார்பாக வந்த நெகட்டிவிட்டி எல்லாத்துக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றிய விவாதங்கள் தொடரட்டும்" என அவர் பதிவிட்டுள்ளார். தான் தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பாக எதுவும் கூறாமல் பொதுவாக தான் தன் பக்கம் நியாயத்தை மட்டும் சொல்லிவிட்டு அவர் இந்த பதிவை முடித்துள்ளதை பலர் கண்டித்து வருகிறார்கள்





















