சினிமா நல்ல செய்திகளை சொல்வதில்லை - ஆதங்கப்பட்ட செளமியா அன்புமணி...!
சினிமாவில் பதுக்கி வைப்பவனும், ரவுடியும் கதாநாயகனாக காட்டப்பட்டால் குழந்தைகள் எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா? என செளமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் வீடுகளில் பாதுக்காப்பு இல்லை எனவும், ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நல்ல குணங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் என சீர்காழியில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி ஆண்டு விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேட்டில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி (தனியார் பள்ளி) இயங்கிவருகிறது. இப்பள்ளியின் 8 வது ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்காக சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயாகத்தின் தலைவர் சொமியா அன்புமணி கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான அழைப்பு கொடுத்து நினைவு பரிசு வழங்கினர். மேலும் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
செளமியா அன்புமணி பேச்சு
அதனைத் தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில்; இந்த ஆண்டு விழா எனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது. நான் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி போட்டிகளில் வெற்றி பெறுவேன். அன்புமணி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பதக்கங்களை சுத்தம் செய்து வைப்பதே பெரிய வேலை. சீர்காழி என்பது தனி சிறப்பு, தமிழை வளர்த்தமண், தமிழ் இசையை வளர்த்த மண், கூட்டுக்குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்கக் கூடிய பகுதியும் சீர்காழி தான்.
பெண் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல்கள்
பெண் குழந்தைகளுக்கும் பெண் கல்விக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளது. கல்வி நிறுவனங்களில் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதே போல் வீடுகளிலும் இல்லை. பெண்குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டியது துணிவு, தைரியம், தன்னம்பிக்கை. ஆண் குழந்தைகளுக்கு நல்ல குணங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும், அன்போடு பழக வேண்டுமென சொல்லிக்கொடுப்பது தாயின் கடமை.
தலைகீழாக மாறிய சினிமா
சினிமாவால் நல்ல செய்திகளை சொல்வதில்லை பழைய படங்களில் பதுக்கி வைப்பவன் வில்லன், கண்டுபிடிப்பவன் கதாநாயகன். ஆனால், தற்போது பதுக்கி வைப்பவனும், ரவுடியும் கதாநாயகனாக காட்டப்படுகிறது. இது போன்ற நல்ல பழக்கங்களை எதை பார்த்து கற்றுக்கொள்வார்கள் நம்மலை பார்த்து தான் கற்று கொள்வார்கள். புகையிலை மது போதை பொருள் குறித்து பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல நாமும் சொல்லி கொடுக்க வேண்டும் என்றார். இதில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று இதில் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேச்சாளராக செளமியா அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகளுமான செளமியா அன்புமணி கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளருடன் கடுமை போட்டியிட்டு செற்ப அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பசுமை தாயகம் எனும் அமைப்பை நடத்தி வரும் அவர் அதனைத் தொடர்ந்து தற்போது பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராக சென்று மாணவர்கள் மத்தியில் உத்வேகம் அளிக்கும் வகையில் பேசி வருகிறார்.

