காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர் - மயிலாடுதுறையில் பரபரப்பு
குத்தாலம் அருகே வீட்டு வாசலில் நின்ற காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி இரண்டு தங்க செயினை பறித்து சென்ற ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
குத்தாலம் அருகே வீட்டு வாசலில் நின்ற காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி இரண்டு தங்க செயினை பறித்து சென்ற ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறை உதவி ஆய்வாளர் மனைவியிடம் கைவரிசை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை மெயின் ரோடு மேலக்கடை பகுதியில் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணனின் மனைவி ஜானகி கடந்த இரண்டாம் தேதி தனது வீட்டின் வாசலில் நின்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் ஜானகியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டு தங்க செயின்களை பறித்து சென்றனர். இது குறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி தலைமையிலான குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Ziegenbalg: 318 ஆண்டுக்கு முன் தரங்கம்பாடி வந்த தமிழறிஞர் சீகன்பால்கு....யார் இவர்..?
வழிப்பறி வழக்கில் சிக்கிய ராணுவ வீரர்
மேலும் இந்த குற்றவாளிகளை பிடிக்க காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 100 -க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்த், அதே பகுதியில் நீடாமங்கலம் சாலையில் வசித்து வரும் சிவா ஆகிய இருவரை கைது செய்து அவர்களிம் இருந்து 6 சவரன் தங்க செயின், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குத்தாலம் காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி காவல் ஆய்வாளர் ஜோதி ராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் ராணுவ வீரர் கைவரிசை
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதும், பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய சிவா உடன் சேர்ந்து, விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் ராணுவ வீரர் வசந்த் வழிபறியில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தைக் கொண்டு மது அருந்தி சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு ராஜபோகமாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து ராணுவ வீரர் வசந்த் மற்றும் சிவா ஆகியோர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து குத்தாலம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகையை பறிகொடுத்த காவல் உதவி ஆய்வாளர் கண்ணனின் மனைவி ஜானகி காவல் நிலையம் வந்தபோது திருடர்களை கண்டவுடன் ஆவேசமாக அழுது கொண்டே திட்டி தீர்த்தார். ஆடம்பர செலவிற்காக ராணுவ வீரர் ஒருவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அறங்கேரிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்