மேலும் அறிய

'சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அரங்கேறிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

வடிவேல் படத்தில் வரும் சூனா பானா காமெடி காட்சி தற்போது நிஜத்தில் அரங்கேறி இளைஞரின் உயிர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த நபரின் மதுவை நண்பர் வாங்கி குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூரண மதுவிலக்கு 

தமிழகத்தில் மது மற்றும் மது சார்ந்த உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். இருந்த போதிலும் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. மேலும் அரசு பெருமளவிலான வருவாய் டாஸ்மாக் மதுபானம் மூலம் வருவதால் மது விலக்கை அமல்படுத்த அரசு முன்வரவில்லை என்பது எதார்த்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்வது, குறைந்த அளவிலான மது, கோதுமை பீர் போன்று புதிய  வகையில் அறிமுகங்கள் செய்யப்பட்டுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.

சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அரங்கேறிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

குடும்ப பிரச்சினை 

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பிள்ளாவிடத்தை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் என்பவரின் 32 வயதான மகன் ஜோதி பாசு. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தினால் ஜோதிபாசு மன உளைச்சலில் இருந்துந்துள்ளார்.

சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அரங்கேறிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

மதுவில் கலக்கப்பட்ட விஷம் 

இந்த நிலையில் நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி  குடித்து விட்டு, மதுபானம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார் ஜோதிபாசு. தொடர்ந்து வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் பூச்சி மருந்தை மதுவில் கலந்து பாதி குடித்துவிட்டு மீதி பாதியை வைத்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான 24 வயதான ஜெரால்டு பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசுவிடம் மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். 

சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அரங்கேறிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

சினிமா காட்சி நிஜத்தில் அரங்கேற்றம்

மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்த நிலையில் ஏற்கனவே மது அருந்தி உச்ச போதையில் இருந்த ஜெரால்டு நண்பரின் பேச்சைக் கேட்காமல் குடித்துள்ளார். நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியிலேயே ஜோதிபாசு மருந்து கலந்த மதுபானத்தை குடித்தால் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் வெகு நேரத்துக்கு பிறகு ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுக்கவே அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

சூனா பானா' காமெடியை போல் மயிலாடுதுறையில் நிஜத்தில் அரங்கேறிய சம்பவம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

இளைஞர் உயிரிழப்பு 

சிகிச்சைக்கு அனுமதித்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜோதி பாசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டுவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். தொடர்ந்து முன்விரோதம் காரணமாக ஜோதிபாசு கொலை செய்யும் நோக்கில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து ஜெரால்டிற்கு கொடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடிவேல் படத்தில் வரும் சூனா பானா காமெடி காட்சி தற்போது நிஜத்தில் அரங்கேறி இளைஞரின் உயிர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Embed widget